174

எ - து: கத்திரிகை இடையுலே தீண்டிய, மேகத்தின் கவினைப்பெற்ற, (1) ஐந்துபகுதியையுடைய மயிர்போலப் புலர்ந்த மணல் மேகம் மழைபெய்யாமற் போகையினாலே விளங்கினவென முற்றாகஅறுத்து மேல்வருகின்ற நீளைம்பா லென்றதனை முற்கூறிய ஐம்பாலைச்சுட்டிய சுட்டுப்பெயராகக் கொள்க.

நொய்தாகப் பிடித்துவிட்டாற்போன்ற அறுதிவிளங்கின நீண்ட ஐம்பாலிற் பல ஒளிகளையுடைய அணிகளுக்கிடையே இட்டுவைத்தபொன்னாற்செய்த அழகியகண்ணிபோலே அந்த மணலிலே பிணிநெகிழ்ந்த பல பூக்களும் வேங்கையினது விரிந்தபூக்களும் ஒழுங்குகொள்ள மணல் ஐம்பால் போல விளங்கின. அவ்வைம்பாலிற் கிடந்த அணியும் (2) பொன்மாலையும்போலே அந்தமணலிலே பல நிறத்தையுடைய பூக்களும் வேங்கைப்பூக்களும் ஒழுங்கு கொண்டனவென உணர்க.

(6). (3) துணிநீராற் 1றூமதி நாளா னணிபெற
(4) வீன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடு
(5) மான்றவ ரடக்கம்போ 2லலர்ச்செல்லாச் சினையொடும்
வல்லவர் (6) யாழ்போல வண்டார்க்கும் புதலொடு

1. ஐந்து பகுதி:- குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை.

2. "எரிமருள் வேங்கை யிருந்த தோகை, யிழையணி மடந்தையிற் றோன்று நாட" ஐங். 294.

3. "துணிநீராற் றூய்மதி.................லிளவேனி லெம்போல" என்புழி ஆலும் ஒடுவும் பலவடுக்கி நல்லை யென்பதோடு முடிந்தன வென்பர், தெய்; தொல். வேற்றுமைமயங்கி. சூ. 18. 'உருபுதொடர்ந்து'.

4. கலி. 29 : 7 - 8 - ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்பையும் பார்க்க.

5. (அ) "கற்றறிந்தார் கண்ட தடக்கம்" பழ. 243. (ஆ) "கற்றறிந் தவரென வடங்கி" கம்ப. சித்திரகூட. 35.
(இ) "அறிவோர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்" வெற்றி.

6. (அ) "யாழிசை யினவண் டார்ப்ப" முல்லை. 8. (ஆ) "வண்டியாழாக, வின்பல் லிமிழிசை கேட்டு"
(இ) "வரையிழி யருவிப் பாட்டொடு பிரச, முழவுசேர் நரம்பி னிம்மென விமிரும், பழவிற னனந்தலைப் பயமலை நாட" அகம். 82: 6 - 7; 318: 5- 7. (ஈ) "யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்ப" கலி. 131 : 9. (உ) 'வண்டியாழாக' திணைமாலை. 111. (ஊ) "யாழின்வண் டார்க்கும் புனலூர" பழமொழி. 221. (எ) "அரவ வண்டின மார்த்துடன் யாழ்செயும்" (ஏ) "இளவண் டியாழ்செய" (ஐ) "பல்வண் டியாழ்செய" சிலப். (12) 'மரவம்' (26) 112. (27) 194. (ஒ) "மழலை வண்டின நல்லியாழ் செய்ய" (ஓ) "பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய" மணி. 4 : 4; 19 : 58. (ஒள) "அரவ வண்டொடு

(பிரதிபேதம்) 1 தூய்மதி நாளா லணி, 2 அலர் செல்லா.