| வைதாக நெறித்தன்ன வறலவிர் நீளைம்பா லணிநகை யிடையிட்ட வீகையங் கண்ணி்போற் பிணிநெகி ழலர்வேங்கை விரிந்தபூ வெறிகொளத் | 6 | துணிநீராற் றூமதி நாளா லணிபெற வீன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடு மான்றவ ரடக்கம்போ லலர்ச்செல்லாச் சினையொடும் வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடு நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பொடு முணர்ந்தவ ரீகைபோ லிணரூழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடு நயந்தார்க்கோ நல்லைம னிளவேனி லெம்போல; | 14 | பசந்தவர் பைதனோய் பகையெனத் தணித்துநம் மின்னுயிர் செய்யு மருந்தாகிப் பின்னிய காதல ரெயிறேய்க்குந் தண்ணருவி நறுமுல்லைப் போதாரக் கொள்ளுங் கமழ்குரற் கென்னுந் தூது வந்தன்றே தோழி துயரறு கிளவியோ டயர்ந்தீகம் விருந்தே. |
இது காலவரவு கண்டு ஆற்றாளாயினவிடத்துத் தோழி காலத்தை நோக்கி அழகிதாகச்செய்தாய் வந்தெனச் சொல்லி, தலைவிக்கு நங்காதலர் வருகின்றாரெனச் சொல்லிவந்த தூதுகாண் இது, நாம் விருந்தயர்கமெனச் சொல்லியது. இதன் பொருள். (1). | (2) எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போன் மையற விளங்கிய துவர்மண லதுவது வைதாக நெறித்தன்ன வறலவிர் நீளைம்பா லணிநகை யிடையிட்ட (3) வீகையங் கண்ணிபோற் பிணிநெகி ழலர்வேங்கை விரிந்தபூ 1 வெறிகொள |
1. இப்பாட்டின் மூலம், ஏடுகளில் ஒரே தொடர்ச்சியாக உள்ளதேனும், முடிபு கருதித் தரவு இருபகுதியாகவும் சுரிதகம் ஒரு பகுதியாகவும் பதிப்பிக்கலாயிற்று. 2. (அ) கலி. 55 : 1 - 2- ஆம் அடிக்குறிப்புப் பார்க்க. (ஆ) "வாளிடைப் படுத்த வயங்கீ ரோதி" கலி. 36 : 23. (இ) "எஃகிடை தொட்ட பூங்குழலை" காஞ்சிப். மாசாத்தன்றளி. 8. 3. (அ) "ஈகையங் கழற்கால்" (ஆ) "ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇ" புறம். 99 : 5, 353 : 3. (பிரதிபேதம்) 1 நெறிகொள.
|