(1) புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்(2)ப னுதிபொர முற்றிய கடும்பனி எ - து: புகையென்னும்படி சிறுதூறுகளைச் சூழ்ந்து பூவாய் அழகிய கள்ளைப் பொதிதலைச் செய்யாத முகைபோலும் வெள்ளிய பல்லின் நுனைகள் தம்மிற்பொரும்படி முதிர்ந்தகடியபனி பகையைவென்று திறையைவாங்கின, பாய்ந்து செல்கின்ற திண்ணிய தேர்மிசை வருமவருடைய கூறுபாடு கொண்ட தலைமையினையுடைய வீரத்தாற் பிறந்த அழகை நாங்கண்டு நுகரும் படியாக நம்முயிரைக் கொள்ளாது விடுவதொன்றாயிருந்ததோ? அது கொண்டேவிடும்;எ-று. இது "பின்பனி தானு முரித்தென மொழிப" (3) என்றதனாற் பின்பனி வந்தது. பரித்திண்டேர் எனவும் பாடம். இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு எ - து: என்று; எ - று. ஆங்கு, அசை. இது தனிச்சொல்.
கோள் காட்டி "இதனுட் பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான் வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு; இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது" (தொல். களவியல். சூ. 16.) என்றும் (இ) வேந்தன் உரிப்பெருட் டலைவனானதற்கு, "பகைவென்று...................விடுவதோ" என்பதை மேற்கோள்காட்டி "இதனுள் வேந்தன் தலைவனானவாறும் வகைகொண்ட தலைமையினழகை நுகரவிரும்பினாள் என்றலின், தலைவியும் அவ்வருணத்தாளாயவாறும் உணர்க", (தொல். அகத். சூ. 24.) என்றும் கூறுவர், நச். (ஈ) 'பகைவென்று திறைகோடற்குப் பிரியுங்கால், அன்புறுகிழவி துன்புற்றிருப்பவரையாது பிரிதலின்று' என்பது (தொல். கள. சூ. 50. நச்.) காணப்படுகின்றது. 1. (அ) "நளிர்மலைப் பூங்கொடி தங்கு புகக்கும், பனிவள ராவியும் போன்ம் மணிமாடத், துண்ணின்று தூய பனிநீ ருடன்கலந்து, காறிரிய வார்க்கும் புகை" பரி. 10; 122 - 5. (ஆ) "புகையிற் பொங்கி வியல் விசும்புகந்து, பனியூ ரழற்கொடி கடுப்பத் தோன்று, மிமயச் செவ்வரை" (இ) "புகைநிற வுருவி னற்சிரம்" அகம். 265 : 1 - 3; 317 : 3. 2. "பன், னுனிபொரு காலம் வர" திருவெங்கைக். 413. 3. தொல். அகத். சூ. 10.
|