பிறந்த அழகை நாங்கண்டுநுகரும்படியாக (1) நம்முயிரைக்கொள்ளாது விடுவ தொன்றாயிருந்ததோ? அது கொண்டேவிடும்; எ - று. தயங்குதல் - அசைவு. பால்போழுமென்று பாடமாயின், பாலை வருத்துமென்க. இதனுள் வென்ற வீரத்தாற் பிறந்த அழகை நுகர விரும்புதலின் தலைவியும் அரசவருணமேயாயிற்று. இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். இஃது 1"ஏவன்மரபின்" என்னும் (2) சூத்திரத்தானுணர்க. (13). | (3) தாள்வலம் படவென்று தகைநன்மா மேல்கொண்டு வாள்வென்று வருபவர் வனப்பார விடுவதோ நீள்கழை நிவந்தபூ நிறம்வாடத் தூற்றுபு தோளதிர் பகஞ்சேரத் துவற்றுயிச் சின்மழை |
எ - து: நீண்ட கரும்பில் ஓங்கின பூவை நிறங்கெடும்படி காற்றாற் றூற்றித் (4) தோள்கள் குளிரால் நடுங்கி நம் ஆகத்தைச் சேரும்படி 2 துவற்று கின்ற இச்சிலவாகியமழை தமது (5) தாள்களாலே வெற்றியுண்டாம்படிவென்று அழகினையுடைத்தாகிய நல்ல குதிரையை ஏறி வாளாலே வென்றுவருமவருடைய வீரத்தாற்பிறந்த அழகை நாங் கண்டு நுகரும்படியாக நம்முயிரைக் கொள்ளாது விடுவதொன்றாயிருந்ததோ? அது கொண்டேவிடும்; எ - று. இத்தாழிசைகள் இரண்டும் முன்பனிப்பருவங் கழிகின்றன கூறினவாகக் கொள்க. (17). | (6) பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ |
1. "மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கு நாங்கள், பிழைத்தால்வந் தேனென்னும் பேர்" நள. சுயம். 103. 2. தொல். அகத். சூ. 24. 3. (அ) "தாள்வலம்.....................விடுவதோ" என்பது தலைவி கூற்றுக்கு மேற்கோள்; தொல். கற். சூ. 5. (ஆ) "வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த" புறம். 24 : 29. 4. "நடுங்குசுவ லசைத்த கையள்" முல்லை. 14. 5. தாள் - முயற்சி. 6. (அ) பாலைத்திணையிற் பின்பனிப் பருவம் வருதற்கு "பகைவென்று ......................கடும்பனி" என்பதை மேற்கோள் காட்டி "இது தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றற்கரிது. இஃதெவர்க்கு மேதமாம் எனவும் இதனானிறந்து படுவேனெனவும் கூறிற்று" (தொல். அகத். சூ. 10.) என்றும் (ஆ) "வாளாணெதிரும் பிரிவினானும்" என்புழி இப்பகுதியை மேற் (பிரதிபேதம்) 1 ஏனைமரபின், 2 தூற்றுகின்ற.
|