படி கோலஞ்செய்வனபோல ஈங்கையினது வாடற்பூக் காம்பு கழன்று அம்மணலிலே வீழ, கணவரைப் பிரிந்த மகளிர் நுதல்போல (1) முன்புபூத்த பீர்க்கம்பூ இப்பொழுது பூவின்றாக, தாம் 1 காதலித்த தலைவரைக்கூடின மகளிர்முகம்போலப்பொய்கையிற் பூக்குந் தாமரையைப் பொய்கை புதிதாகப் பூக்க, முன்பனிக்காலத்திற்கும் பின்பனிக்காலத்திற்கும் மேலாய்நின்ற இளவேனிற்காலம் ஆயிழாய்! நம்மைக்கூடினவர் தப்பாமல்வருவேமென்றுகூறின காலம், அதனாற் பெற்றதென்? அக்காலம் வருந்துணையும் ஆற்றியிராதபடி முன்பனிக்காலத்து வாடையாலும் மெய் வளைதற்குக் காரணமான பின்பனியாலும் உண்டாகிய வினை ஒழிந்து அயர்தல் இறந்துபாட்டை நமக்குக் கூட்டுகையினாலே நெஞ்சு கலக்கமுறாநின்றது; யான் எங்ஙனம் ஆற்றுவேன்; 2 எ - று. முன்னர்நின்ற செயவெனெச்சங்கள் மேனின்றவென்னும் பெயரெச்சத் தோடுமுடிந்து, அது பொழுதென்னும் பெயரோடு முடிந்தது. கையாறும் ஒரு மெய்ப்பாடென்றுணர்க. இது தரவு. (9). | (2) மயங்கமர் மாறட்டு (3) மண்வௌவி வருபவர் (4) தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ பயங்கெழு பல்கதிர் பால்போலும் பொழுதொடு வயங்கிழை தண்ணென வந்தவிவ் வசைவாடை |
எ - து: உலகிற்கு (5) உணவுகளை விளைத்தற்குக் காரணமாகிய மதியின் கதிர்கள் பாலையொத்து விளங்கும் இராப்பொழுதோடே விளங்குகின்ற அணிகள் குளிரும்படியாக வந்த இந்த அசைதலையுடைய வாடைக்காற்று இரண்டு படையும் தம்முள் மயங்கினபோரிலே மாறாகிய அரசனைக்கொன்று அவன் நாட்டைக்கைக்கொண்டு களிற்றின்மேலே வருமவருடைய வீரத்தாற்
1. "இவர்கொடிப் பீர மிரும்புதன் மலரு, மற்சிரம்" (ஐங். 464) என்பது இங்கே அறிதற்பாலது. 2. (அ) "வேண்டா, ரெறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்" (ஆ) "படைமயங்காரிடை" புறம். 178 : 6 - 7, 343 : 17; (இ) "கழுமிய ஞாட்பினுள்" களவழி. 11. 3. "போயவர் மண்வௌவி வந்தனரகலி. 148 : 23. 4. "தயங்கிய.................... விடுவதோ" என்பது தலைவி கூற்றுக்கு மேற்கோள்; தொல். கற். சூ. 5. நச.் 5. "மண்ணக மனைத்து நிறைந்தபல் லுயிர்கட், காய வமுத மீகுத லானும்" என்பது ஈண்டு அறிதற்பாலது. கல். 23. (பிரதிபேதம்) 1 காதலித்தவரை, 2 என்றாள்.
|