168

புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி;
எனவாங்கு;
22வாளாதி வயங்கிழாய் வருந்துவ ளிவளென
நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி
மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.

இஃது இளவேனிற்காலத்து வருவல், அத்துணையும் ஆற்றியிருவென்று மண்ணசையால் வேந்தன் சென்றவழி, முன்பனிக்காலமும் பின்பனிக் காலமும் வந்து வருத்தலின் ஆற்றாத தலைவியைத் 1 தோழி வருவரென வற்புறுப்பவும், வன்புறை எதிரழிந்தவழி, தலைவன் யாங்குறித்த பருவம் வருந்துணையும் ஆற்றியிராளெனப் பின்பனிக்காலத்து வருகின்ற வரவுணர்ந்து தோழி கழியுவகையாற் கூறியது.

இதன் பொருள்.

புணர்ந்தவர் முகம்போலப் (2) பொய்கைபூப் (3) புதிதீன
(4) மெய்கூர்ந்த பனியொடு மேனின்ற வாடையாற்
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமற்
பொய்யேமென் றாயிழாய் புணர்ந்தவ ருரைத்ததை
கடும்புனல் கால்பட்டுக் 2கலுழ்தேறிக் கவின்பெற
நெடுங்கயத் தயலய லயிர்தோன்ற வம்மணல்
வடுத்தூர வரிப்பபோ லீங்கைவா டுதிர்புகப்
(1) பிரிந்தவர் நுதல்போலப் பீர்வீயக் காதலர்ப்
5

எ - து: யாறு கூதிர்க்காலத்து, பெருகுதலிற் கடிதாகிய நீர் வற்றிக் கால்களாக ஓடுதலுண்டாய்க் கலக்கந் தெளிந்து அழகுபெற, நெடிய குளங்களின் அயலேஅயலே நுண்மணல்தோன்ற, அம்மணலின் அறல்மறையும்


1. பிரிந்தவர் நுதற்குப் பீர்க்கம்பூ உவமையாதலை 53 - ஆம் கலி, 14 - 5 ஆம் அடிகளின் குறிப்பிற்காண்க.

2. "பொய்கை பூப்புதிதீன" என்பது வினைக்குறிப்பு அகர வீறன்றிப் பிறஈற்றான் முடிக்குஞ் சொல்லை விசேடித்து வருதற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 30. "செய்து செய்யூ" கல்; சூ. 31. நச்.

3. புதிதீன வென்பதற்குப் புதிதாக ஈன எனப் பொருள்கூறி, செயவென்னுந் தெரிநிலை வாய்பாட்டிற்குரிய குறிப்பெச்சம் என்பர், இராமாநுசகவிராயர்; நன். வினை. சூ, 23.

4. கலி. 29 : 12 - 13.

(பிரதிபேதம்) 1 வருவரெனத்தோழி வற்புறுப்பவும், 2 கலிழ்.