"பாசறைப் புலம்பலும்" (1) என்புழித் தூதுகண்டு தலைவன் புலம்புவ னாதலின், தூதாய்ச்சென்ற பாணன் கூறினான். இது "திணைமயங் குறுதலும்" (2) என்பதனாற் பாலைக்கண் மருதம் நிகழ்ந்தது. இதனால், தலைவிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் 1 பிறந்தன. இது 2 "மரபினது" (3)என்றதனான் நான்கடித்தரவிற்கு நான்கடித் தாழிசை வந்து தனிச்சொற்பெற்று நான்கடிச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக் கலிப்பா. (29) (31). | (4) கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறிக் கவின்பெற நெடுங்கயத் தயலய லயிர்தோன்ற வம்மணல் வடுத்தூர வரிப்பபோ லீங்கைவா டுதிர்புகப் பிரிந்தவர் நுதல்போலப் பீர்வீயக் காதலர்ப் | 5 | புணர்ந்தவர் முகம்போலப் பொய்கைபூப் புதிதீன மெய்கூர்ந்த பனியொடு மேனின்ற வாடையாற் கையாறு கடைகூட்டக் கலக்குறூஉம் பொழுதுமற் பொய்யேமென் றாயிழாய் புணர்ந்தவ ருரைத்ததை; | 9 | மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர் தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ பயங்கெழு பல்கதிர் பால்போலும் பொழுதொடு வயங்கிழை தண்ணென வந்தவிவ் வசைவாடை; | 13 | தாள்வலம் படவென்று தகைநன்மா மேல்கொண்டு வாள்வென்று வருபவர் வனப்பார விடுவதோ நீள்கழை நிவந்தபூ நிறம்வாடத் தூற்றுபு தோளதிர் பகஞ்சேரத் துவற்றுமிச் சின்மழை; | 17 | பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ |
1. தொல். அகத். சூ. 41. 2. தொல். அகத் சூ. 12. இந்நூற்பக்கம், 162 : 1 - ஆம் குறிப்புப் பார்க்க. 3. தொல். செய். சூ. 134. 4. இச்செய்யுள் (அ) மண்கோடலும் திறைகோடலும் அரசர்க்கே யுரிய வென்பதற்கும், (தொல், அகத், சூ, 27. நச்) (ஆ) குறிப்பினாற் பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியதற்கும் (தொல். புறத். சூ, 28. நச்.) மேற்கோள். (பிரதிபேதம்) 1 பிறக்கும், 2 மரபின வென்றதனால.்
|