166

திருநாள் இக்காலத்து வெற்றியையுடைய இழையினையுடைய பரத்தையருடனே விளையாடுவன், அதனாற் பெற்றதென்? கூறுவார் இன்றே; எ - று.

"சினனே பேதைமை நிம்பிரி நல்குர, வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே" (1) என்பதனாற் பரத்தையரோடு விளையாடுவானெனப் பொறாமை கூறியும் 1அவன் ஈண்டையானாகவெனக் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது. இவை விளையாட்டிற் பிறந்த உவகையென்னும் மெய்ப்பாடு; இவை தன்கட் டோன்றிய பெயர்பற்றி வரும்.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு

எ - து: எனச்சொல்லி; எ - று.

ஆங்கு அசை.

இது தனிச்சொல்.

(19). (2) தணியாநோ யுழந்தானாத் (3) தகையவ டகைபெற
வணிகிளர் நெடுந்திண்டே ரயர்மதி பணிபுநின்
காமர் கழலடி சேரா
நாமஞ்சா றெவ்வரி னடுங்கினள் பெரிதே

எ - து: மீளாத காமநோயிலேவருந்தி அமையாததகைமையையுடையவள் நின்னுடைய விருப்பத்தையுடைய கழலணிந்த அடியைப் பணிந்து சேராத அச்சம மைந்த (4) பகைவரைப்போல பெரிதுநடுங்கினள், அவள் அழகைப் பெறும்படி அழகுவிளங்கின நெடிய திண்ணிய தேரைச் செலுத்துவாயாக; 2 எ- று.

இது சுரிதகம்.


1. தொல். பொருளி. சூ. 51. இந்நூற்பக்கம் 165 : 3 - (ஆ) குறிப்புப் பார்க்க.

2. அவணிலை யுரைத்த லென்பதற்கு "தணியாநோ....................... பெரிதே" என்பதை மேற்கோள் காட்டி, பாசறைக்கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க என்பர், இளம்பூரணர்; தொல். கற். சூ. 25. 'நிலம் பெயர்ந்து'.

3. "ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக், கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவரப், பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து, மாணிழை யரிவை காணிய வொருநாட், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்" பதிற். 81 : 28 - 32.

4. "வடதிசை மருங்கின் மன்னர்த முடித்தலைக், கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது, வறிது மீளுமென் வாய்வா ளாகிற், செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப், பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற், குடிநடுக் குறூஉங் கோலே னாகென" எனச் செங்குட்டுவன் வஞ்சினங் கூறுதலாலும் பகை யரசரை நடுக்குதல் அரசர்க்குரிய தொழிலென்பது விளங்கும். சிலப். 26 : 13-8.

(பிரதிபேதம்) 1 அவனீண்டடையானாக, 2 எனப் பாணன் பாசறைக்கட் கூறினான்.