165

10. பானாள்யாம் படர்கூரப் (1) பணையெழி லணைமென்றோண்
மானோக்கி னவரோடு மறந்தமைகு வான்மன்னோ
வானாச்சீர்க் கூடலு ளரும்பவிழ் நறுமுல்லைத்
தேனார்க்கும் பொழுதெனத் தெளிக்குந ருளராயின்

எ - து: இக்காலம் அமையாத (2) புகழையுடைய மதுரையிடத்து அரும்புகளவிழ்ந்த நறிய முல்லையிலே தேனினம் ஆரவாரிக்குங் காலமென்று அவற்குத் தெளிவிப்பார் சிலருளராயின், 1 நடுயாமத்தே யாம் வருத்தமிகத் தான் மூங்கிலின் அழகையுடைய அணைபோலும் மெல்லிய தோளையும் மானினது நோக்கம்போலும் நோக்கினையுமுடையபரத்தையருடனே 2கூடி நம்மை மறந்து அவரிடத்தே அமைந்திருப்பன்; அதனாற் பெற்றதென்? கூறுவார் இன்றே; எ - று.

(14). (3) உறலியா மொளிவாட (4) வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதோடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
(5) 3 தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்

எ - து: இக்காலம் பெறுதற்கரிய இளவேனிற் காலத்துடனே பெருமை யினையுடைய பூங்கொத்துக்களையுடைத்தாகிய யாற்றிடைக்குறையைப் புடை சூழ்ந்து வையை அறலுண்டாம்படி ஒழுகுமென்று அவற்குச் சொல்லுவார் உளராயின் 4தன்னை உறுதற்குரிய யாம்ஒளிகெடும்படியாக காமனுக்கு எடுத்த


1. "பணையெழி லணைமென்றோள்" கலி. 1 : 9.

2. (அ) "மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (ஆ) "மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரை" மது. 429, 699.
(இ) "புகழ்பூத்த லல்லது, குன்றுத லுண்டோ மதுரை" (ஈ) "புகழ்பூத்த லல்லது, பொய்யாத லுண்டோ மதுரை" பரிபாடல்.

3. (அ) "உறலியாம்....................... ருளராயின்" என்பது தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியதற்கும் தொல். அகத். சூ. 43. நச் (ஆ) நிம்பிரிக்கும் (நிம்பிரி - பொறாமை தோன்றுங் குறிப்பு; அவரோடும் விளையாடுவா னெனப் பொறாமை கூறியும் அவன் ஈண்டையானாக வேண்டுமெனக் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது" என்பர், நச்;) தொல். பொருளி. சூ. 51. நச.் மேற்கோள்.

4. "மல்கிய துருத்தியுண் மகிழ்துணைப் புணர்ந்தவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ" கலி. 35 :13-4.

5. (அ) "அறல்வாரும்......................ருளராயின்" என்பது அறையென்பது சொல்லுதற்றொழிற் பண்பின்மேல் வருதற்கு மேற்கோள்; நன். உரி. சூ. 17. மயிலை. (ஆ) "வையைவா ரவிரற லிடைபோழும் பொழுதினான்" கலி. 28 : 7.

(பிரதிபேதம்) 1 நடுவியாமத்தே, 2 கூடிமகிழ்ந்து நம்மை, 3 அறலாரும், 4 தம்மை.