164

(1) வெயிலொளி யறியாத விரிமலர்த் (2) தண்காவிற்
ருயிலாலும் பொழுதெனக் கூறுந ருளராயின்

எ - து: இக்காலம் வெயிலினது ஒளியைக்கண்டறியாத விரிந்த மலரை யுடைய குளிர்ந்த பொழிலிலே குயில்கூவுங்காலமென்று அவற்குக் கூறுவார் சிலருளராயின், யாம் துயிலின்றி யாமக்கடலை நீந்தத் தான் மயில்போலும் இயலினையுடைய பரத்தையர் மருவுதலை நுகர்ந்து அவருடைய அழகிய புனலையுடைய மடுக்களையாடி நம்மை மறந்து அவரிடத்தே அமைந்திருப்பன்; அதனாற் பெற்றதென்? கூறுவார் இன்றே; எ - று.


நுகர்ந்தமை தலைவிகூறியதற்கும் (தொல். கற்பியல். சூ. 46. 'யாறுங்' இளம்.) (இ) "ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான் என்றமையின் இது விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது" என்பதற்கும் (தொல். மெய்ப். சூ. 11. பே; இ - வி. சூ. 578; (ஈ) "துயிலின்றி யாநீந்த" என்பது வினையெச்சக் குறிப்புக்கும் நன். வினை. சூ. 25. மயிலை. மேற்கோள்.

1. (அ) "வெயினுழை பறியாக் ககுயினுழை பொதும்பர்" பெரும்பாண். 374; (ஆ) மணி. 4 : 5; (இ) "இருடூங்கு சோலை" கலி. 50 : 5, (ஈ) "கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை" புறம். 21: (உ) "பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கிருள்வளைவுண்ட மருள்படுபூம்பொழில்" தொல். பொருளி. இளம். மேற்கோள். (ஊ) "காய்கதிர் நுழையாக்கடி பொழில்" தமிழ்நெறி. மேற். (எ) "வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்தபைம்பொழில்" தே.
(ஏ) "தூங்கிருள்வெய்யோற்கொதுங்கிப், புக்கிருந்தா லன்னபொழில்" நள. சுயம். 22. (ஐ) "வெங்கதிர் நுழையா விரிபொழில்" இராமா. சீதைவனம்புகு. 22. (ஒ) "விசும்பு போழ்ந்துலாங், காய்கதிர் நுழைகலாக் காவினாடல்போல்" நைடதம். கான்புகு. 4. (ஓ) "விரிகதிர்ச் செஞ்ஞா யிற்றின் வெயில்புகாப் பொதும்பர் தோறும்" சீகாளத்தி. கண்ணப்ப. 66. என்பவையும் (ஒள) "கலிகெழு கூடல், வரையுறழ் நீண்மதில் வாய்சூழ்ந்த வையைக், கரையணி காவி னகத்து" கலி. 92 : 11 - 3. என்பதும் (ஃ) வையையும்போலும் யாற்றினும்..............திருமருதந் துறைக் காவேபோலுங் காக்களினும் விளையாடி உறைபதியைக் கடந்துபோய்நுகர்ச்சியெய்துதலும் தலைவற்கும் காமக்கிழத்தியர்க்கும்.....................உரிய" தொல். கற்பியல், சூ, 50, நச்.) என்பதும் ஈண்டு அறிதற்பாலன.

2. "அடைகரை மாஅத் தலங்குசினை யொலியத், தளிர்கவினெய்திய தண்ணறும் பொதும்பிற், சேவலொடு கெழீஇய செங்க ணிருங்குயில், புகன்றெதி ராலும் பூமலி காலையு, மகன்றோர் மன்றநம் மறந்திசி னோரென" நற். 118.