வாய்விரிபு (1) பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம் எ - து: சிலவான சொல்லினையுடையாய்! சேனிடைப் பிரிந்தோரிடத்தே சென்ற என்னெஞ்சினை ஆற்றுவித்துக் கொண்டிருத்தல்வேண்டுமென்று நீ சொல்லும் எல்லைத்தன்றாக மிகவும் ஆற்றி நிறுப்பேன், அதனாற் பெற்றதென்? யான் ஆற்றிநிறுத்தலைக் கைகடக்கும்படியாக வாடைக்காற்று வாய் விரிந்து பனியையேற்றுநின்ற விரவுதலையுடைய பல மலர்களை அளைந்து வந்து பிரிந்தோர்க்கு நோய்செய்தற்குக் காரணமான இளவேனில் நாளின் கண்ணே வருத்தத்தைத் தரும்; எ - று. நீவவெனத் திரிக்க. 14 போழ்துள்ளார்துறந்தார்கட் புரிவாடுங்கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி வீழ்கதிர் விடுத்துபூ விருந்துண்ணு (2) மிருந் (3) தும்பி (4) யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம் எ - து: விளங்குகின்ற இழையினையுடையாய்! இளவேனிற்காலத்தை நினையாராய் நம்மை மறந்தாரிடத்தே மனம்புரிதலால் என்மேனிவாடுங் கோட்பாட்டினைப் பிறர் அறியலாகாதென்று சூழ்ந்து அப்பொழுதே மறைப்பேன், அதனாற் பெற்றதென்? யான் மறைத்ததனைக் கைகடக்கும் படியாக
யுழன்மாலைத் தீங்கிளவி யொன்றிரண்டு தான்மிழற்று மொருநாட் காறும்" சீவக. 1353. என்பவற்றால் சின்மொழி யென்பதற்குக் காரணம் விளங்கும். (ஈ) பழமொழி யுரைகாரர் சின்மொழி யென்பதற்கு மென்மொழியென்று பொருள் கூறுவர்; பழ. 226. 1. (அ) "அரும்பனி கலந்த வருளில் வாடை, தனிமை யெள்ளும் பொழுதில்" ஐங் 479. (ஆ) "மெய்கூர்ந்த பனியொடு மேனின்ற வாடையாற், கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது" கலி. 31 : 6 - 7. 2. தும்பி கரியநிறமுடையதென்பதனை, இருந்தும்பி - கரியதும்பி; கலி. 30 : 4, 78 : 2. 123 : 2, 127 : 3; கார். 15. என்பதும் "தகையவர் கைச்செறித்த தாள் போலக் காந்தண், முகையின்மேற் றும்பியிருக்கும்" கலி. 43 : 8 - 9. என்னுமிடத்து, 'தாள்போல' என்பதற்கு, தாட்கூட்டாகிய நீலக்கடைச் செறிபோல என்று விளக்கமெழுதியிருத்தலும் வற்புறுத்தும். 3. "தும்பி வண்டொடு தூவழி யாழ் செய" சீவக. 854. 4. பயனிலையுவமைக்குச் சிறுபான்மை கொண்டவென்பதும் வருமென்பதற்கு "யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்" என்பது மேற்கோள் தொல். உவம. சூ. 14. பே.
|