வீழ்கின்ற ஞாயிற்றின் கதிர் அலர்த்தின பூவினது தேனையுண்ணுங் கரிய தும்பியினது யாழோசையையொத்த முழங்குகின்ற ஓசை நடக்கும் மாலைக் காலம் வந்து வருத்தத்தைத்தரும்; எ - று. கொண்ட, உவமவுருபு. 18 தொடிநிலை நெகிழ்த்தர்கட் டோயுமென் னாருயிர் வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு நெடுநிலாத் 1 திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம் எ - து: குற்றம் நீங்குகின்ற வார்த்தையினையுடையாய்! தொடியை நிற்கின்ற நிலையி னின்று நெகிழப் பண்ணினாரிடத்தே நின்று தோயும் என்னுடைய அரிய உயிரை அவரிடத்துச்சென்று செறியாமற் காக்கத்துணிவேன், அதனாற் பெற்றதென்? யான் அங்ஙனம் துணியவும் வண்டுகள் *திறந்து உண்ணும்படியாக நிரைத்த இதழ்கள் அலர்ந்த மணத்தினையுடைய மலர்கள் கமழும் நாற்றம் நெடியநிலாவையுடைய இராக்காலத்தேவந்து வருத்தத்தைத் தரும்; எ - று. இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு எ - து: எனச்சொல்லி; எ - று. ஆங்கு அசை. இது தனிச்சொல். 23 வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப் பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தேகிநம் மருந்துயர் களைஞர் வந்தனர் (1) திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே எ -து: வருந்தித் தங்கினநின் வளைகழலும்படியாக தலைவர் பின் பாராதே தூரிய நாட்டிலே பிரிந்திருந்து தேடும் பொருட்பிணியாலே போய்த் திருந்தின எயிறுகள் விளங்குதற்குக் காரணமான நின் தேன்போலும் மொழியை நினைத்து நம் அரிய துயரைக் களைவாராய் வந்தார்; இனி, நீ வருந்தாதே கொள் ; 2 எ - று. இது சுரிதகம். இதனால், தலைவிக்கு புணர்வாகிய உவகை பிறந்தது. இது 3 "நிலனொருங்கு மயங்குதலின்று" (2) எனவே காலம் 4 மயங்கு மென்றலின், வேனிலும் வாடையும் மாலையுங் கங்குலும் 5 வந்தன. இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (28)
1. "முள்ளெயி றிலங்கச் செவ்வாய் திறந்து, சில்லென் கிளவி மெல்லென மிழற்றி" பெருங். (4) 5 : 16 - 7. 2. தொல். அகத். சூ. 12. இந்நூற்பக்கம் 157 : 1 - குறிப்புப்பார்க்க. (பிரதிபேதம்) 1 துறந்து, 2 என ஆற்றுவித்தாள், 3 நிலமொருங்கு, 4 மயங்குதலின், 5 வந்தது.
|