1 லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்தபொழுதின்கண் எ - து: கருப்பந் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய் இளமைக்காலத்து அழகைக் கெடுக்குமளவன்றி மிகவருத்துகையினாலே அதற்கு அலமந்த சுற்றத்தார், பின்னர் அவள் மெய்ந்நோக்காடு கண்டு வருத்தமுறும்படி புதல்வனையீன்றவள், அப்புதல்வனைக்கொண்டு அக்குடியையெல்லாம் பாது காத்துக்கிடந்த கிடக்கைபோல, தன்னிடத்துப் பயிரையுண்டாக்கின உழவர், தனக்கு இடையில் வந்த நோய்க்கு வருந்திய வருத்தம் நீங்கும்படி, தான் ஈன்ற உணவுகளைக்கொண்டு குடிமக்களையெல்லாம் பாதுகாத்த உலகம், அவள் தன்னைப்புல்லிய ஈன்றணுமை தீர்ந்து புதுநலம் பெற்றாற் போல, தான் ஈன்ற பசுமை தீர்ந்த புதிய அழகு தோன்ற, வளையினையுடைய இளையோர் இழைத்த வண்டற்பாவையும் பூவுங் கலந்துகிடந்தாற்போல வார்ந்த மணல் பூக்கள் உதிர்ந்துகிடந்த வடுவைத் தன்னிடத்தே கொள்ள, இளையமகளிருடைய மயிர்போல 2 இடுமணலை ஊடறுத்தலையுடைய நீர் ஒழுக, மாமை நிறத்தையுடையவள் திதலைபோல மாவீன்ற சிறிது முற்றின தளிரின் மேலே அழகிய இதழையுடைய பல மலர்களினுடைய வியக்கத்தக்க தாதுகள் உதிர்தலைச்செய்ய, பெருமை பொருந்த இளவேனிற்காலம் வந்துவிட்ட பொழுதின்கண்ணே; எ - று. ஏர்தர - எழுச்சிதர. ஐயென்னும் உரிச்சொல் ஐயவெனப் பெயரெச்சக் குறிப்பாய் நின்றது. இது தரவு. 10 சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் (1) சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி
தளிரொடும்" (இ) "மாயவண் மேனிபோற் றளிரீன வம்மேனித், தாய சுணங்குபோற் றளிர்மிசைத் தாதுக” கலி. 32 : 7, 35 : 3 - 4. என்பவையும் (ஈ) “பூத்ததைந்த தாழ்சினைத் தளிரன்ன வெழின்மேனி தகைவாட" கலி. 40 : 19 - 20; என்றவிடத்து "பூத்தாழ்ந்த தளிரெனவே சுணங்கும் மாமை நிறமுங் கூறிற்று" என்றெழுதியிருக்குமுரையும் (உ) "வண்ணநுண் சுண்ணமாட்டி வளரிளந் திங்களன்ன, வொண்ணுதலொருத்தி மாமை யொழுகுமா மேனி நோக்கும், பண்ணமர் மழலைப் பல்காற் பறவை வீழ்ந் துழுது மென்பூந், தண்ணறுந் தாது துற்றுத் தயங்குசெந் தளிரு நோக்கும்" பாகவதம். (10) கோவியரை. 28. என்பதும் ஈண்டுக் கருதற்பாலன. 1. (அ) சின்மொழி கலி. 57 : 11, 125 : 16, 132 : 13; (ஆ) "அமிழ்து பொதி செந்நா வஞ்ச வந்த, வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை" குறுந். 14. (இ) "கூரெயிறு நாப்போழ்த லஞ்சியஞ்சி, (பிரதிபேதம்) 1 ஆயித்ட் பன்மலர், 2 இளமணலை.
|