158

வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி
யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்;
18.தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர்
வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு
நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட
கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்;
எனவாங்கு;
23வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப்
பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தேகிநம்
மருந்துயர் களைஞர் வந்தனர்
திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே.

இது பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுப்ப வன்புறையெதிரழிந்தாட்கு, தோழி அவன்வரவுணர்ந்து கழியுவகையாற் கூறியது.

இதன் பொருள்.

(1) தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி
னல்லாநதா 1ரலவுற வீன்றவள் கிடக்கைபோற்
பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர
(2) வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள
விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார
மாவீன்ற (3) தளிர்மிசை மாயவ டிதலைபோ


1. "தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்" என்பது செய்தெனெச் சக்குறிப்பாகிய அன்றியென்பது வினைமுதல்வினையான் முடிந்ததற்கு மேற்கோள். தொல். வினை. சூ. 32. கல்; சூ. 33. நச்.

2. வண்டலாடும் இளைய மகளிரை 'வளையவர்' என்றார்; (அ) "இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும், விளைபொருளுரையார்" மணி. 10 : 79 - 80. 26 : 68 - 9. என வருதலும் (ஆ) "சில்வளை விறலி" என்னுமிடத்து, "பல்வளையிடுவது பெதும்பைப் பருவத்தாகலின் அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறியவாறு" என்பதும் ஈண்டறிதற் பாலன. பதிற். 57 : 6.

3. (அ) "மாவின், றளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத், தீர்க்கி னரும்பிய திதலையர்" மது. 706 - 8. (ஆ) "ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந்

(பிரதிபேதம்) 1 அலமர்வுற.