எனவாங்கு எ - து:என்று: எ - று. ஆங்கு அசை. இது தனிச்சொல். 21ஆயிழா யாங்கன முரையாதி சேயார்க்கு நாந்தூது மொழிந்தனம் விடல்வேண்டா நம்மினுந் தாம்பிரிந் துறைத லாற்றலர் பரிந்தெவன் செய்தி வருகுவர் விரைந்தே எ - து: ஆராய்ந்த இழையினையுடையாய், அங்ஙனம் பயனின்றாக உரை யாதேகொள்; சேய்நாட்டில் உறைகின்றவர்க்கு நம்வருத்தத்தைக் கூறினமாய் நாம் தூதுபோக விடவேண்டா; நம்மினும் தாம் இக்காலத்துப் பிரிந்திருத்தலை ஆற்றாராய் விரைந்து வருகுவர்; ஆதலால் வருந்தி என்னகாரியஞ் செய்கின்றாய்? 1எ - று. இது சுரிதகம். இதனால், தலைவிக்கு இழிவும், தோழிக்கு அச்சமும் பிறந்தன. இஃது ஏழடித்தரவும் நான்கடித்தாழிசையும் 2 பொருள்பெற்ற தனிச் சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக் கலிப்பா. (27) (29). | (1) தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர | | 5 வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்; | | 10 சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரிபு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்; | | 14. போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி |
1. இச்செய்யுள், பாலையில் வேனிலும் வாடையும் கங்குலும் மாலையும் வந்ததற்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 12. நச். (பிரதிபேதம்) 1 எனவற்புறுத்தினாள், 2 தனிச்சொல்லும்.
|