றோடவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கட் டோடுறத் தாழ்ந்து துறைதுறை கவின்பெறச் (1) செய்யவ ளணியகலத் தாரமொ டணிகொள்பு தொய்யகந் தாழ்ந்த கதுப்புப்போற் றுவர்மணல் (2) வையவா ரவிரற லிடைபோழும் பொழுதினான் எ - து: சுனையிடத்துப் பூக்களை ஆராய்ந்து பறித்தலும் வேண்டாவாகிப் பாடுதல் அமைந்த தலைமையினையுடைய பூக்களைக் கொம்புகள் தாங்கொடுக்க வேண்டுமென்று 1விரும்பியுங் கொடுப்பனபோல் இதழ்விரிகின்ற கமழுங் (3) கண்ணியைக் கட்டிச் சூடும் அம்மகளிரிடத்தே திரட்சியுறத் தாழ்ந்து கொடுத்துத் துறைதொறுந் துறைதொறும் மரங்கள் அழகுபெறும்படி யாறு அறலிடைபோழும் பொழுதின்க ணென்க. கவின்பெற அறல் இடைபோழுமென்றது காரணகாரியமாம்; பெருகியநீர் வற்றினகாலத்து அவைபூத்தலின். குறிஞ்சிநிலத்திற் சுனைப் பூக்களைத் தேடிப் பறியாதபடி இக்கரையின் மரங்கள் வேண்டும்பூக்களைக் கொடுத்தனவென்றார். சுனையவுமென்னும் உம்மையைக் கொய்யலுமென மாறுக. உம்மை, எதிர்மறை. சினையவுமென்னும் உம்மையை நயந்துமென மாறுக. உம்மை, சிறப்பு. கல்லிடத்துநீர்நிலைக்குச் சுனையென்னும் பெயரே ஆண்டுக்கூறுதலானும் யாற்றங்கரைக்கண் இன்மையானும் சினை தாழ்ந்து கொடுத்தலன்றிச் சுனை தாழ்ந்து கொடுத்தல் இன்மையானும் இதுவே பொருளாம். தோடுறத்தாழ்ந் தென்றதற்குத் திரட்சியுறத் தங்கியென்றும், கவின்பெறவென்றதற்குக் கவின் பெறாநிற்கவென்றும் பொருள்கூறின், பெறாநிற்க இடைபோழு மென்றது பிறவினையாதலின் ஆற்றிற்குச் சிறப்புக் கூறிற்றன்றாய் வேறோர் வினையாமாறுமுணர்க. திருமகளுடைய அழகினையுடைய மார்பிடத்து முத்தாரத்தோடே ஒப்புக்கொண்டு அறலிடை போழுமென்க. சிவந்த தலைக்கோலந் தங்கின மயிர்போற் சிலவிடங்கள் சிவப்பையுடைத்தாகிய மணலையுடைய 2வையை, யாற்றில் ஒழுகுகின்ற விளக்கத்தையுடைய அறன்மணலை யாரமோடணிகொள்பு. நடுவே பிளந்தோடும் பொழுதிண்கணென்க. இது தரவு.
வல்லியிற், பூக்களும் பூஞ்சுனை பூத்த போலுமே" பாகவதம். (10) புனல் விளையாட்டு. 13. 1. (அ) "மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை, யணிமுலைத் துயல் வரூஉ மாரம் போலச், செல்புன லுழந்த சேய்வரற் கான்யாறு" சிறுபாண். 1 - 3. (ஆ) "ஆலைநீ ராடை மலைமுலை யாகத், தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற், கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை" சிலப். 5 : 1 - 3. 2. "அறல் வாரும் வையை" கலி. 30 : 16 3. மகளிர் கண்ணி சூடுதல்: சீவக. 1317, 1355; பெருங். (1) 34 : 192; 38 : 172; (2) 16 : 7; 17 : 50; 18 : 6; (3) 5 : 62;9: 91. (பிரதிபேதம்) 1 விரும்பிக்கொடுப்பன, 2 வையை, வையையாற்றில்.
|