இஃது இளவேனில்வரவின்கண் ஆற்றாத தலைவி தூதுவிடக்கருத, தோழி, அவர் பிரிந்திருத்தலை நம்மினுந் தாம்வல்லரல்லரெனச் சொல்லி வற்புறுத்தியது. இதன் பொருள். 28. பாடல்சால் சிறப்பிற் (1) சினையவுஞ் சுனையவு நாடினர் கொயல்வேண்டா நயந்துதாங் கொடுப்பபோற்
1. (அ) அகரவீற்றுப் பலவறி சொல்லுக்கு உண்பவென்பதை உதாரணங் காட்டியவழி "உண்பவென்பது பகரவீற்றுப் பலரறி சொல்லன்றே, அஃறிணைக்காயின வாறென்னை யெனின்:- பகரவிறுதி யாயினன்றே உயர்திணைக்காவது. ஈண்டுக் காட்டப்பட்டது, 'கானந் தகைப்ப செலவு' 'சினையவுஞ் சுனையவு, நாடினர் கொயல் வேண்டா நயந்து தாங் கொடுப்பபோல்' என நின்றனபோல எதிர்காலத்து வரும் பகரமூர்ந்து நின்ற அகர வீறாதலின், அஃறிணைச் சொல்லேயாமென்பது. செய்யுளாகலின் தகைப்பன கொடுப்பன என்னுஞ் சொற்கள் தகைப்ப கொடுப்ப என விகாரவகையான் அவ்வாறு நின்றனவாகலான், வழக்கு முடிவிற்கு அவைகாட்டல் நிரம்பாதெனின்:- தகைத்தன, தகையா நின்றன; தகைத்த, தகையாநின்ற. எனவும் கொடுத்தன, கொடா நின்றன; கொடுத்த கொடாநின்ற. எனவும் இறந்தகாலத்தும் நிகழ்காலத்தும் அகரவீறு முதனிலைக் கேற்றவாற்றான் அவ்வக் காலத்திற்குரிய எழுத்துப்பெற்று அன்பெற்றும் பெறாது முடியுமாறு போல எதிர்காலத்தும் முதனிலைக் கேற்றவாற்றான் அக்காலத்துக்குரிய எழுத்துப்பெற்று அன்பெற்றும் பெறாதும் முடியும். எதிர்காலத்துக்குரிய எழுத்தாவன: பகரமும் வகரமுமாம். அவற்றுட் பகரம் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடிவுழி, தகைப்பன, தகைப்ப; கொடுப்பன, கொடுப்ப. எனவும் வகரம் பெற்று அவ்வாறு முடிவுழி, வருவன, வருவ; செல்வன, செல்வ. எனவும் இவ்வாறு முடியுமாகலின், தகைப்ப கொடுப்ப என்பன விகாரமெனப்படா; இயல்பேயா மென்பது. கொடுப்பன யாவை அவைபோல என உவமைகருதாது அவை தம்மையே சுட்டி நிற்றலிற் கொடுப்ப என்பது பெயரன்மை யறிக" என்பர், சேனாவரையர்; தொல். கிளவி. சூ. 9. (ஆ) பகரவிறுதி அஃறிணைக் கண்ணும் வருமென்பதற்கு 'நயந்துதாங் கொடுப்பபோல்' என்பதைச் சிலர் உதாரணங்காட்டியது தவறென்று மறுத்து அது 'விரும்பிக் கொடுப்பாரைப் போலென மாந்தரோ டுவமைகுறித்து வந்ததென்பர், தெய்வச்சிலையார்; தொல். கிளவி. சூ. 7. 'ரஃகான்'. (இ) "மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும், வண்ணவண்ணத்த மலராய்பு" குறிஞ்சி. 113 - 114. (ஈ) "மாக்கருங்கண்ணியர் வனைந்த வண்குழற், றேக்கமழ் மலர்நனிசிதற வாடலாற், காக்களின் மரங்களுங் கமழும்
|