153

எ - து: நோய்மிக்க நெஞ்சோடேவருந்தாதேகொள்; தோழி! நாம் அமர்ந்தகாதலர், தனிமையாயின் நாமில்லாத தனிமையாயிருந்தது; காலமாயிற் பிரிந்தார்க்கு நடுக்கஞ்செய்யும் இளவேனிற்காலமாயிருந்தது; ஊரிலுள்ளார் கொண்டாடும்விழவாயிற் காமவேளுக்குச்செய்யும் விழாவாயிருந்தது; ஆதலாற் பெரிதுங் கலங்குவளென்று கருதிப் பகைவர் மயக்கமுறுதற்குக் காரணமான (1) கடிய திண்ணிய தேரை `விரைந்து செலுத்தித் தாம் துணையாந் தன்மையை நமக்குத் தந்தார்காண்! 1 எ - று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை தோன்றிற்று.

இஃது 2 எட்டடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் ஐயடிச் சுரிதகமும்பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (26)

28.பாடல்சால் சிறப்பிற் சினையவுஞ் சுனையவு
நாடினர் கொயல்வேண்டா நயந்துதாங் கொடுப்பபோற்
றோடவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கட்
டோடுறத் தாழ்ந்து துறை துறை கவின்பெறச்
செய்யவ ளணியகலத் தாரமொ டணிகொள்பு
தொய்யகந் தாழ்ந்த கதுப்புப்போற் றுவர்மணல்
வையைவா ரவிரற லிடைபோழும் பொழுதினான்;
8விரிந்தானா மலராயின் விளித்தாலுங் குயிலாயிற்
பிரிந்துள்ளா ரவராயிற் பேதுறுஉம் பொழுதாயி
னரும்பட ரவலநோ யாற்றுவ ளென்னாது
வருந்தநோய் மிகு மாயின் வணங்கிறை யளியென்னோ;
12 புதலவை மலராயிற் பொங்கரின வண்டாயி
னயலதை யலராயி னகன்றுள்ளா ரவராயின்
மதலையி னெஞ்சொடு மதனில ளென்னாது
நுதலூரும் பசப்பாயி னுணங்கிறை யளியென்னோ;
16தோயின வறலாயிற் சுரும்பார்க்குஞ் சினையாயின்
மாவின தளிராயின் மறந்துள்ளா ரவராயிற்
பூவெழி லிழந்தகண் புலம்புகொண் டமையாது
பாயனோய் மிகுமாயிற் பைந்தொடி யளியென்னொ;
எனவாங்கு;
21ஆயிழா யாங்கன முரையாதி சேயார்க்கு
நாந்தூது மொழிந்தனம் விடல்வேண்டா நம்மினுந்
தாம்பிரிந் துறைத லாற்றலர்
பரிந்தெவன் செய்தி வருகுவர் விரைந்தே.

1. கடுமை - விரைவு

(பிரதிபேதம்) 1 என உவகையாற்கூறினாள், 2 ஏழடித்தரவும்.