எ - து: நஞ்சாயல் கெட்டமைகண்டு மலைமேலே மயில் ஆரவாரித்து ஆடும்படியாக, ஊரிலுள்ளார் ஆரவாரித்து அலர் தூற்றும்படியாக, நம்முடைய இயற்கைநலமும் மிகக்கெடும்படியாக, தாம் விரும்பாத நம்மையோ மறப்பாராக; பகைவரை மாயஞ்செய்துகொல்லாது வென்றுகொல்லும் பரக்குங் கடலிடத்து எய்தாநின்ற மாமரத்தைத் தடிந்த 1 வென்றிவேலையுடைய முருகன் திருப்பரங் குன்றின்மேற் பரத்தையருடன் விளையாடும் விளையாட்டையும் விரும்பாரோ? விரும்பில் வருவரன்றோ ? எ - று. "எந்நில மருங்கிற் பூவும் புள்ளு, மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்" என்ற (1) விதிபற்றிக் குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற்காலத்து வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. 17 மையெழின் மலருண்கண் மருவூட்டி மகிழ்கொள்ளப் பொய்யினாற் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க 2 தையிய மகளிர்தம் மாயமோ டமர்ந்தாடும் வையைவா ருயரெக்கர் நுகர்ச்சியு முள்ளார்கொல் எ - து, 3 எம்மை மயலாக்கிக் கருமையுடைத்தாகிய அழகினையுடைய நீல மலர்போலும் மையுண்கண்ணை மகிழ்ச்சிகொள்ளும்படி 4 தம்மோடே மருவுதலூட்டித் 5 தாம் செய்த பொய்யாலே மனந் தம்மிடத்திலே புரிதலைச்செய்த தாம்விரும்பாத நம்மையோமறப்பாராக; கோலஞ்செய்தலையுடைய பரத்தையர் தம்முடைய திரளோடே மனம் பொருந்தி விளையாடும் வையை யாற்றிடத்து நீண்ட உயர்ந்த இடுமணலிடத்து நுகர்ச்சியையும் நினையாரோ? நினைக்கில் வருவரன்றோ? எ - று. மருவுதலூட்டியென்றார், அக்கண்ணிடத்து நாவாற் செய்யுந் தொழிலை. மருவூட்டிச்செய்தவென ஒருசொல் வருவிக்க. இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு எ - து: என்று கூறி; எ - று. ஆங்கு அசை. இது தனிச்சொல். 22 நோய்மலி நெஞ்சமொ டினைய றோழி நாமில்லாப் புலம்பாயி னடுக்கஞ்செய் பொழுதாயிற் (2) காமவேள் விழவாயிற் கலங்குவள் பெரிதென வேமுறு கடுந்திண்டேர் கடவி நாமமர் காதலர் துணைதந்தார் விரைந்தே
1. தொல். அகத். சூ. 10. இந்நூற் பக்கம், 151 : 2-குறிப்புப் பார்க்க. 2. காமன் விழவு: கலி. 30 : 13. 35 : 14. (பிரதிபேதம்) 1 வென்வேலை, 2 தைஇய, 3 என்னை, 4 தன்னோடே, 5 தான்.
|