கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல் எ - து: நிலம் பொலிவுபெறுதற்கு ஏதுவாகிய மரத்தின்மேலேயிருந்து காலங்கண்டு ஏக்கழுத்தஞ்செய்து ஆரவாரிக்குங் குயில்கள் நம்மை இகழும் படியாக, நன்மைபொலிவுபெற்ற நமதுநிறங் கெடும்படியாக, தாம் விரும்பாத நம்மையோமறப்பாராக; (1) தாம் அணிந்த கலங்கள்பொலிவுபெறுதற்குக் காரணமான அழகினையுடைய பரத்தையருடைய அழகு தம் மனத்தை மகிழ்ச்சியைச் செய்கையினாலே தம் அறிவு பொலிவுபெற்று அவரைப் புகழ்தல் அமையாத கூடலையும் நினையாரோ? நினைக்கில் வருவரன்றோ? எ - று. பெயரெச்சத்திற்குக் காரணம்வருதல் கருவிக்கண் அடங்கும். மறந்தைக்க, வியங்கோட் டிரிசொல். (13). | (2) கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க (3) வொன்னாதார்க் (4) கடந்தடூஉ (5) முரவுநீர் (6) மாகொன்ற (7) வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல் |
நிலம் பூத்தமரம்போல நின்றது’ என்றும் (சீவக. 29.) வற்புறுத்துவர் இவ்வுரையாசிரியர். (ஊ) நிலம்பூத்த மரமென்புழி ஏதுப்பொருண்மை கருவிக்கண் அடங்கு மென்பர், இ - வி. உரையாசிரியர்; இ - வி. சூ. 243. 1. “பூணுக் கழகளிக்கும் பொற்றொடியை” நள. சுயம்வர. 151. 2. (அ) ”கன்மிசை...விரும்பார்கொல்” இது குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற்கண் வருதலிற் பொழுதொடு புள்ளுமயங்கிற்று. என்றும். தொல். அகத். சூ. 19; (ஆ) இதனுள் வென்வேலான் குன்றெனமலை கூறினார் என்றும் தொல். புறத். சூ. 32. கூறுவர்; நச். (இ) இ - வி. நூலார் பாலையில் குறிஞ்சித்திணைக்குரிய மயில் வந்ததென்பர்; இ - வி. சூ. 394: 3. “சொற்களெல்லாம் இந்நூலில் ஓதிய இலக்கணத்தால் முற்றுப் பெற்றில வாயினும் பலவகைப்பட்ட ஆசிரிய மத விகற்பத்தான் வரும்......பிறநூன் முடிபினான் முடியினும் இலக்கணப் பிழைப்பின்று” என்று கூறி, அதற்கு “ஒன்னாதார்......குன்றின்மேல்” என்பதனை மேற்கோள் காட்டி வெவ்வேறு காலப் பெயரெச்சம் அடுக்கி வந்த தென்பர், தெய்; தொல். எச்ச. சூ. 64. ‘செய்யுண்’. 4. கடந்தடுதல்: கலி. 2 : 4, 101 : 31, 105 : 1; பரி. 15 : 45; புறம். 8. 5, 23 : 16, 40 : 2, 80 : 9, 110 : 1. 5. “உரவுநீர் மாகொன்ற வேல்” சிலப். 24 : 45. 6. முருகு. 60. ‘மாமுதறடிந்த’ என்பதன் குறிப்புப்பார்க்க. 7. “வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்” சிலப். 29 : ‘தென்னவன்’ பக்கம். 577.
|