எ - து: (1) கொடுத்தற்றொழிலிடத்துப் பொருட்குறை காட்டாமற் கொடுத்து (2) இல்லறம் நிகழ்த்தும் முறைமையை அறிந்து நிகழ்த்திய தீவினையில்லா தவனுடைய செல்வம்மிகுமாறுபோல இனிதாகியநீரையுடைய ஆற்றங்கரையில் மரங்கள் தழைக்க, கேட்டோர் மயக்கம் உறுதற்குக் காரணமான மடமொழியினையும் மான்பிணையினது அழகையுடைய நோக்குப்போலு நோக்கினையுமுடைய காதலையுடைய மகளிருடைய எயிறுபோல மணத்தையுடைய மௌவலின் முகை அலர, தண்ணிதாகிய அறுதியையுடைய மணல் கழன்று வீழ்ந்த தாதாலுந்தளிராலுங் காதலரைக் கூடினவருடைய மயிர்போல அழகு பெற, இளவேனிற்காலம், அறிவில்லாத அமைச்சன் காரியத்தைப்புலப்படுத்தப் படைவலி இல்லாத அரசனது நாட்டிலே பகையரசன் படைவந்து விடுமாறுபோலத் தங்குதலைச் செய்தது. எ - று. ஊழ்ப்பத் தகைபெற இளவேனில் இறுத்தந்ததென்க. காட்டாதென்பதற்குக் கொடுத்தென்றும் கழல்குபுவென்பதற்கு வீழ்ந்தவென்றும் வினைவருவிக்க. இது தரவு. (9). | (3) நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க |
1. தானந்தவ மிரண்டுமென்னுங் குறளுரையில் “பெரும்பான்மைபற்றித் தானம் இல்லறத்தின்மேலும், தவம் துறவறத்தின்மேலும் நின்றன” என்பர் பரிமேலழகர்; குறள். 19. 2. “அறந்தலை” கலி. 9. “அறனெனப்பட்டதே யில்வாழ்க்கை” குறள். 49. 3. (அ) “நிலம்பூத்த......முள்ளார்கொல்” என்பதனைப் பாட்டுடைத் தலைவன் ஊர்கூறியதற்கு மேற்கோள்காட்டி “இதனுட் கூடலிடத்துத் தலைவியென்பது கூறினார்” என்பர், நச்; தொல். புறத். சூ. 32. (ஆ) “பெயரெச்சங்கொண்டுமுடியு மறுவகைப் பெயர்களுள் கருவியென்றதனால் மூன்றாவதற்கோதிய காரணமும் எதுவுங்கொள்க. வந்ததுகண்டு வாராது முடித்தலென்பதனால் ‘நிலம்பூத்தமரமிசை நிமிர்பாலும்’ என்றவழி நிலம்பொலிவுபெற்ற மரமெனப் பொலிதற்கேதுவின்கண் வந்தது” என்பர். தெய். தொல். வினை. சூ. 38. ‘அவற்றொடு’ (இ) “நிலம் பூத்தமரம்” என்பதை அகரவீற்றுப் பெயரெச்சம் காரணத்தின்கண் வந்ததற்கு (தொல். வினை. சூ. 37. நச்.) மேற்கோள் காட்டி, இக்கருத்தை (ஈ) “பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி, ணாண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவியும்” என்புழி ‘சுட்டியவென்பது நிலம்பூத்த மரமென்பதுபோலும் பெயரெச்சம்’ என்றும் (தொல். சொல். கிளவி. சூ. 4.) (உ) “தேன்வாயுமிழ்ந்தவ மிர்துண்ட வன்போன்று” என்பதற்கு, தேனை உமிழ்தற்குக் காரணமாகிய அமிர்தத்தை உண்டவனை யொத்து என்று பொருள்கூறி ‘உமிழ்ந்தவமிர்து
|