149

13கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத்
தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க
வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார் கொல்;
17மையெழின் மலருண்கன் மருவூட்டி மகிழ்கொள்ளப்
பொய்யினாற் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க
தைஇய மகளிர்தம் மாயமோ டமர்ந்தாடும்
வையைவா ருயரெக்கர் நுகர்ச்சியு முள்ளார்கொல்;
எனவாங்கு;
22நோய்மலி நெஞ்சமோ டினைய றோழி
நாமில்லாப் புலம்பாயி னடுக்கஞ்செய் பொழுதாயிற்
காமவேள் விழவாயிற் கலங்குவள் பெரிதென
வேமுறு கடுந்திண்டேர் கடவி
நாமமர் காதலர் துணைதந்தார் விரைந்தே.

இது தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனில் வரவின்கண் எம்மை யோமறக்க, இக்காலத்து இவ்வூரின்கட் டாம் விளையாடும் விளையாட்டும் 1மறந்தாரோவெனச் சொல்லி ஆற்றாளாய தலைவிக்கு, தோழி தலைவன் வரவுணர்ந்து கழி யுவகையாற் கூறியது.

இதன் பொருள்.

(1) ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போற் றீங்கரை மரநந்தப்
பேதுறு மடமொழிப் (2) பிணையெழின் மானோக்கின்
(3) மாதரார் முறுவல்போன் மணமௌவன் முகையூழ்ப்பக்
5காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போற் 2 கழல்குபு
தாதொடுந் தளிரொடுந் தண்ணற றகைபெறப்
(4) பேதையோன் வினைவாங்கப் பீடிலா வரசனாட்
(5) டேதிலான் படைபோல விறுத்தந்த திளவேனில்

1. (அ) " இவறலும்.................ஏதமிறைக்கு" குறள். 432. (ஆ) "அறத்தாற்றி னீயாத தீகை யன்று" முதுமொழிக். 48.
(இ) "உள்ளியுள்ளவெல் லாமுவந் தீயுமவ், வள்ளி யோரின் வழங்கின மேகமே" கம்ப. பால. ஆற்றுப். 4.
(ஈ) "வள்ளியோரீதல்வரையாது போல"` கல்.` 30.

2. "பிணையெழின் மானோக்கு"கலி. 58 : 2. குறள். 1085, 1089.

3. (அ) "மணமௌவன் முகையன்ன மாவீழ்வார் நிரை வெண்பல்" கலி. 14:3. (ஆ) "மௌவல் வான்முகைத்,
துணை நிரைத்தன்ன மாவீழ் வெண்பல்" அகம். 21 : 1 - 2.

4. வினைவாங்கல்: கலி. 8 : 1; நைடதம், அன்னத்தைத்தூது. 105; திருவிளை. பன்றிக்குட்டிகளை. 13.

5. ஏதிலர் - பகைவர்; பழ. 52.

(பிரதிபேதம்) 1 மறந்தாரென, 2 கழல்புகு.