148

(21). (1) எனநீ
தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் (2) வாய்மொழித் தூதே

எ - து. என்றுகூறிமனஞ்சுழலாதேகொள்; அதற்குக்காரணம்யாதெனில், நங் காதலர் பொருகின்ற மாறுபாட்டையுடைய யானையை யுடையவராய்ப் போர் செய்தற்கு மாறுபட்டு எதிர்வந்தவருடைய போரிடத்தே நீ கூறியவாறே மேலான நாடுகளைப் பெற்ற வெற்றியையுடையர்; ஆகையினாலே, அவருடைய மெய்ம் மொழியாகிய தூது வருவாரென்றுசொல்லி வந்ததுகாண்; இனித் தோழி நீ இனிது வாழ்வாயாக; 1எ - று.

மேம்பட்ட, ஈண்டுப் பெயராய் நின்றது. வரவெனவந்தன்று என்று பாடமாயின், வெற்றியையுடையர்; ஆகையினாலே அவர் மெய்ம்மொழியாகிய தூது வந்ததென்று சொல்லி வந்ததென்க.

எனநீ, தனிச்சொல். எஞ்சியது சுரிதகம்.

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை தோன்றிற்று.

இது தரவின்கண் ஐஞ்சீரடிவருதலிற் கொச்சகமாய்க் கலிவெண் பாட்டின் வேறாயிற்று. (25)

27.ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போற் றீங்கரை மரநந்தப்
பேதுறு மடமொழிப் பிணையெழின் மானோக்கின்
மாதரார் முறுவல்போன் மணமௌவன் முகையூழ்ப்பக்
5 காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போற் கழல்குபு
தாதொடுந் தளிரொடுந் தண்ணற றகைபெறப்
பேதையோன் வினைவாங்கப் பீடிலா வரசனாட்
டேதிலான் படைபோல விறுத்தந்த திளவேனில்;
9 நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள
நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க
கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப்
புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல்;

1. "எனநீ.................. வாய்மொழித்தூதே" என்பது தூதுவந்தமை தலைவிக்குத் தோழி கூறியதற்கு மேற்கோள். தொல். கற்பி. சூ. 9. நச்.

2. வாய்மொழித்தூது: "தானறிந்து கூறுந் தலைமற் றிடையது, கோனறைந்த தீதென்று கூறுமால்" பாரதம்.

(பிரதிபேதம்) 1 என்றாற்றுவித்தாள்.