(1) நசைகொண்டு (2) 1 தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர் எ - து. குற்றமற்ற என்னலங்கெடுவதற்குத் திசைதோறுந் திசைதோறும் தேனினம் ஆராவாரிக்குந் திருமருதந்துறைமுன்னே அருளுதலைச் செய்வார், நம்மைக் காத்தற்குரியான் இவனென்று நச்சுதல் கொண்டு தம்மை நிழலாக வந்தடைந்த குடிமக்களைத் தமக்குப் பாரமென்று பொறுத்துத் தம் புகழ் உல கெங்கும் பரக்கையினாலே அவ்வுலத்தார் புகழத் தமக் கயலாகிய நாட்டிலே இருக்கின்றவர்: எ - று. "யாறுங் குளனுங் காவு மாடிப், பதியிகந்து நுகர்தலு முரியவென்ப" (3) என்பதனால், திருமருதந்துறையில் அருளுவாரென்றாள். (17). | (4) அறல் 2 சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி (5) யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர் |
எ - து. எம்முடைய அழகினையுடைய நுதலும் பசந்து நாமும் 3 வலிமை யமைந்த பெரிய அழகை இழப்பதற்கு நீரற்று ஓடுதல்சுருங்கின இளவேனிற் காலத்தே அருளுதலைச் செய்வார், முன்பு நாடு ஆட்சிபெற்ற அரசர்செய்த வருத்தத்திற்கு அஞ்சி நிழலாக வந்தடைந்தார்க்கு நெஞ்சுவருந்தாதபடி பகைவரைப் பேணிக் காத்து, நெறியன்றி அவ்வரசர் பொருளை விரும்புகையினாலே, அவரை நீங்கின நாட்டிலே இருக்கின்றவர்; எ - று. இவை மூன்றும், தாழிசை.
1. (அ) "இரந்தது நசைவாட்டாயென்பது கெடாதோதான்" கலி. 100 : 12. (ஆ) "நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே" இனியது. 27. (இ) "நசையவர்க்குக், கூடுவ தீவானைக் கொவ்வைபோற் செவ்வாயாய், நாடுவர் விண்ணோர் நயந்து" ஏலாதி. 35. 2. "அடைந்தார் துயர்கூரா வாற்ற லினிதே" இனியது. 32. 3. தொல். கற்பியல். சூ. 50. 4. "அறல்சாய ...............வேறாகி" என்பது மூன்றாவது ஏழாவதனோடு மயங்கிவருதற்கு மேற்கோள்; தொல். வேற்றுமைமயங்கு. சூ. 27. தெய். 'ஏனையுருபு'. 5. "பொருத்த மழியாத பூந்தண்டார் மன்ன, ரருத்தமடிநிழ லாரை- வருத்தாது, கொண்டாரும் போலாதே கோட லதுவன்றோ, வண்டுதா துண்டு விடல்" பழ. 242. (பிரதிபேதம்) 1 தந்நிழல், 2 சாயப் பொருளோடெம், 3 வலியமைந்த.
|