எ - து. இயற்கை நலங்கெட்ட என்னுடைய பெருமையையுடைய மெல்லிய தோளைப் பலவரியினையுடைய இனமாகிய வண்டுகள் புதிதாகிய தேனை நுகரும் இளவேனிற்காலத்தே கூட நினைப்பார், முன்னர் (1) அந்நாடு ஆள்பவர் கலக்கமுறுத்த அலைபெற்று, பின் தன்னை நிழலாக அடைந்த குடிமக்களுக்கு நெஞ்சுவருந்தாதபடி பகைவரைப் பேணிக் காத்து, முன்பு நாடாட்சி பெற்ற பகைவரை வென்ற புகழை உலகத்தார் புகழப் புதுமையையுடைய நாட்டிலே இருக்கின்றவர்; எ - று. என்றதனால்; (2)திறைபெற்றநாட்டைத் திருத்தித் தந் நாடுபோல நெறி முறைமை நடத்துவித்தலே பொருளென்று இருக்கின்றவர் நம்மை நினையார் காணென்று நிகழ்ந்தது கூறினாள். விருந்து நாடெனவே பகைவர் தோற்றுத் திறை கொடுத்தமை தோன்றிற்று. 1 உள்ளுவாரெனு முற்றுவினை பெயர்கொண்டுநின்றது. காத்து உறைபவ ரென்க. (13). | (3) திசைதிசை தேனார்க்குந் (4) திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவதருளுவார் |
விருது பாட" காஞ்சி. தக்கீச. 48. (ஏ) "பாடினார் வெல்புகழைப் பல்புலவர்" (ஐ) "வெல்புகழறைந்தோர்க் கீந்து" பு-வெ. வாகை. 1.பாடாண்கொளு. 26 1. "மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயி, னறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்குமன்றே" சூளாமணி. மந்திரசாலை. 25. 2. "வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர,் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப" பதிற்று. 53. 3. (அ) "திசைதிசை ..............டுறைபவர்" என்பது காவற்பாங்கின்கண் தலைவன் கூறியதுகேட்ட தலைவி கூறியதற்கும்" (தொல். அகத். சூ. 44. நச். ) (ஆ) பாட்டுடைத் தலைவன் ஆறுகூறியதற்கும் (தொல். புறத். சூ. 32. நச்.) மேற்கோள். இப்பகுதியில் (இ) வேண்டிக்கோடற் பொருண்மைக்கண் அருளுவாராகவென்பது அருளுவார் என ஈறுதிரிந்ததுஎன்பர், தெய்; தொல். வினை. சூ. 29 "அவற்றுண்முன்னிலை" "திசைதிசை" கோவையார். 128. கம்ப. முதற்போர். 129, நாகபாச, 135, இராவணவதை. 85. விநாயக. மயூரேசர். 197. 4. (அ) "திருமருதமுன்றுறை சேர்புனற்கண்டுய்ப்பார்" (ஆ) "திருமருத நீர்ப்பூந்துறை" (இ) "தீம்புனல்வையைத் திருமருதமுன்றுறையால்" (ஈ) "திருமருத முன்றுறை முற்றங் குறுகி" பரிபாடல். 7 : 83, 11 : 30, 22 : 45, 'மாநிலம்': 72. (உ) "வருபுனல் வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்" அகம். 36 : 9 - 10. (ஊ) "வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" சிலப். 14 : 72. (பிரதிபேதம்) 1 உள்ளுவாரென முற்றுவினைப்பெயர்.
|