145

9 பல்வரி யின (1) வண்டு புதிதுண்ணும் பருவத்துத்
தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா
(2)ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது (3) காத்தோம்பி
(4) வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்


1. வண்டு புதிதுண்ணுதல்: இந்நூற்பக்கம், 107 : 4 - குறிப்புப்பார்க்க.

2. (அ) "அலந்தயரா நின்றார், நிழலடைந்தே நின்னையென் றேத்திக் - கழலடையச், செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக், கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ" பு. வெ: வஞ்சி. 7. (ஆ) "களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியு மற்றோர், விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர் நடைய, தூனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே, தானுடம் பட்டார்கடாம்" நீதிநெறி. 40. (இ) "மறந்தலை மயங்கி வைறாயத் தொருவரை யொருவர் வாட்ட, விறந்தலை யுருமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கு, மறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்குஞ், சிறந்ததொன்றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்" சூளாமணி. மந்திரசாலை. 28. (ஈ) "உடைந்தவர்க் குதவா னாயி னுள்ள தொன் றீயா னாயி, னடைந்தவர்க் கருளா னாயி னறமென்னா மாண்மை யென்னாம்" கம்ப. விபீடணன். 111. (உ) "செருவி னொட்டலரைக் கொன்று திறைகொண்டு நாடுகாத்து................ செங்கோல் வளர்ப்பது மாட்சியாமே"
(ஊ) "உலகிடை யூறெய்தா, வரிசையிற் காத்து நீதி வழுக்கினார் தம்மை மொத்திக், கரிசறப்பொருளுங் கோடல் காவலர் தருமம்". விநாயக. அரசியற்கை. 45, 91.

3. "ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த, பேரருளினார்க்குப் பெறலரி தியாதரோ, வூர்திரைய மாமகர வெள்ளத்து நாப்பணும், போர் மலைந்து வெல்லும் புகழ்" இரும்பல் காஞ்சி.

4. (அ) "அடுதிறலுயர் புகழ்வேந்தே" மது. 130. (ஆ) "வெல்புகழுயர்நிலை" கலி. 105 : 50. (இ) "சயப்புகழார் பலர்வாழுந் தடங்குருகூர்" திருவாய். (3) 2 : 11. (ஈ) "அயன்றலை கொண்டுசெண் டாடல் பாடி யருக்க னெயிறு பறித்தல் பாடிக், கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலாலுதைத்தல் பாடி, யியைந்தன முப்புரமெய்தல்பாடி" திருவாசக. திருப்பொற். 18. (உ) "திரிபுர மெரித்த வாறுந் தேர்மிசை நின்றவாறுங், கரியினை யுரித்தவாறுங் காமனைக் காய்ந்த வாறும், ............பரிவினாற் பாட" பெரிய. திருநீலகண்டயாழ். 5. (ஊ) "அயன்றலை யறுத்தல் பாடி யரக்கனை யடர்த்தல் பாடிக், கயந்தனை யுரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி, வியன்புர மெரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடிச், சயந்தரும் புகழ்கண் மற்றும் பாடினான் சால வாழ்த்தி" திருவால. 56 : 9. (எ) "காலனைச் செகுத்தவாறு முப்புரங் காய்ந்தவாறும், போல்வன வுலகந்தேறப் பூதர்கள்