143

(1) பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு
(2) மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு
(3) மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு
மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமு 1மாங்குத்
தீதுதீர் சிறப்பி (4) னைவர்க னிலைபோலப்


புதுவீ" அகம். 83.(ஆ) "வேனற்பூத்த மராஅங் கோதையோடும்" தே. (இ) "கோட்சுரும் பரற்று நாட் சுரத் தமன்ற, நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினைபற்றி, வலஞ்சுரி வாலிணர் கொய்தற்குநின்ற, மள்ளன்" ஐங்குறு. 383.
(ஈ) "செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு" முருகு. 202 (உ) "கருங்கான் மராஅத்து வைகுசினை வான்பூ" ஐங். 331. (ஊ) "பரியல்.....,,,,......பொரியரை மராஅத்து வாலிணர்ச் சுரிமலர்" யா. வி. சூ: 44. மேற்கோள். (எ) "சங்கீர்ந்த துகளேபோன், மரவம்பாவை வயிறாரப் பருகி வாடை யதுநடப்ப" சீவக. 2690. என்பவை வலியுறுத்தும்.

1. "குழந்தை வெண்மதி மிலைச்சிய குரூச்சடைக் குழகா, விழந்த பல்லினை யெய்துவா னிரவியெற் பிழம்பு. பொழிந்த சேயொளித்தேரொடும் புக்கதே போலும், வழிந்து தேன்கமழ் மலர்த்திர டதைந்ததண் செருந்தி" காஞ்சி. திருக்கண்புதைத்த. 159. “பருதி” கம்ப: திருவபிடேக. 2. வில்லி. கிருட்டிணன். 86.

2. (அ) "கரைத்துறு தண்பூங் காஞ்சிகள் சாகைக் கரமோச்சி, விரைத்த கரும்பைத் தைவரு தோற்றம் விரிதார்வண், டிரைத்தெழு திண்டோட் கேள்வரொ டூடு மிளையார்மே, னிரைத்தமர் செய்வான் வேள்சிலை பற்று நிகழ்விற்றால்" (ஆ) "பருப்புழைக்கரக் களிற்றுரிப் போர்வையம் பகவ, பொருப்பு மாதுட னாட்டயர் பொலிவினைக் கேளாக்கருப்பு வில்லினா னினிப்பய மின்றெனக் கணைகள், விருப்பி னெய்யவந் திட்டதே வீழ்ந்தது காஞ்சி" காஞ்சி. திருநாட்டு. 116. திருக்கண் புதைத்த. 158. (இ) "மீனேறுயர்த்த கொடிவேந்தனை" சீவக. 6.

3. (அ) "சினங்கொள் வாளராத் தொடையல்சூழ் செஞ்சடைக் கூத்தா, வனங்க வேளெனுந் தமையனுக் கணியுருத் தருகென், றினங்கொள் வான்றவ மியற்றுவா னவனுடை யிளவன், மனங்கொள் காதலின் வந்தெனத் திகழ்ந்தது ஞாழல்" காஞ்சி. திருக்கண். 160. (ஆ) "ஏனோர்க்கிசைப்பின்" பெருங். (3.) 14 : 285

4. "செங்கதிர் மேனி யான்போ லவிழ்ந்தன செழும்பலாச, மங்குலூர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கட், புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை, யங்கதி, ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா" என இதனிழலாய்வரும், செய்யுள் இங்கே ஒப்புநோக்கற்பாலது; திருவிளை. தருமிக்கு. 12.

(பிரதிபேதம்) 1 ஆங்கத்.