142

13திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம்
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்;
17அறல் சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா
ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவரீ;
21எனநீ;
தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.

இது " மேவிய சிறப்பி னேனோர்" என்னும் (1) சூத்திரத்தில் பகை மேற் சென்ற அரசன் திறைப்பெற்ற நாடு காத்து அதன்கண் தன்னெறிமுறைமை 1அடிப்படுத்துவருதற்குப் பிரிவனென்றலின், பிரிவின்கண் தலைவன் இளவேனிற் 2காலங்குறித்துப் பிரிய, அக்காலவரவின்கண் தலைவி ஆற்றாளாய் அவர் நமக்கு அருளுங் காலையில் அருளார்காணென்றாட்கு, தோழி, அவர்வரவிற்கு இக்காலம் தூதாயன்றே வந்தது? நீ ஆற்றுவாயாகவென வற்புறுத்தியது.

இதன் பொருள்.

(2) ஒருகுழையொருவன்போலிணர் சேர்ந்த (3) மராஅமும்


1. தொல். அகத். சூ. 28.

2. (அ) "ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" என்பது முதற்குமுதல் உவமமாய் வந்ததற்கு மேற்கோள். தொல். உவம. சூ. 6 'முதலுஞ் சினையும்' இளம். (ஆ) "நாஞ்சில் வலவ னிறம் போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" கார், 19. (இ) "பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு, வால்வீசேர்ந்த மராஅங் கண்டு, நெடியோன் முன்னொடு நின்றனனாமென"மணி. 19: 75 -7. எனவும் (ஈ) “மராமெனமருளுமேனி வள்ளலோடு” (உ) "வெறித் துணர் மராம்புரை வெள்ளைமேனியான்" பாகவதம், (10.) அரவின் மேலாடிய. 1. சாம்பன்மணம்புரி. 48. எனவும் வந்திருத்தல் காண்க. (ஊ) "ஒருகுழை யொருவன்போல்" என்பது இரண்டாம் வேற்றுமை யுருபு, தொக்கவழித் தொகாது நின்றாற்போலப் பொருளுணர்த்தற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 17. நச்.

3. மராஅம் சுரத்திற்கும்வேனிற்குமுரியதென்பதையும் வெள்ளியபூக்களை யுடையதென்பதையும் (அ) "வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ்

(பிரதிபேதம்) 1 அடிப்படுத்துவதற்கு, 2 காலத்துப்.