துளிமாறு பொழுதினிவ் வுலகம் போலுநின் னளிமாறு பொழுதினிவ் வாயிழை கவினே எ - து: யாம் நினக்குக் கூறுகின்ற வார்த்தையால் என்னபயன் உண்டு? எம்மினுங் காட்டில் அப்பகை யுண்மையை நீ நன்றாக அறிந்தாய்; அதுவுமன்றி, நெடுந்தகாய்! இந்த ஆராய்ந்த இழையினையுடையாளழகு, நீ அளித்தலை நீங்குங் காலத்து இவ்விடத்து வானந் துளிமாறுபொழுது இவ்வுலகங் கெடுமாறு போலக் கெடுங்காண் ; அதனை உட்கொள்ளாய் ; 1எ - று. இது சுரிதகம். இதனால், தோழிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன. இது பெருமைக்கெல்லை கூறிய பன்னீரடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (24) (26). | (1) ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு | 5 | மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமு மாங்குத் தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப் போதவிழ் மரத்தோடு பொருகரை கவின்பெற நோதக வந்தன்றா லிளவேனின் மேதக; | 9 | பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்; |
பண்டையில் அகன்றாற்போலத்தோன்ற என்றவாறு' பதிற். 69 - 15. என்ற வுரையும் ஈண்டு அறியற்பாலன. 1. பகைமேற்சென்ற அரசன் திறைபெற்ற நாடுகாத்து அதன்கட் டன்னெறி முறைமை அடிப்படுத்தப் பிரிந்ததற்கு இச்செய்யுளை மேற்கோள்காட்டி "இதனுள் ஒல்குபுநிழல் சேர்ந்தார்க்கெனவே, முன்னர் ஆள்பவர்கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னைநிழலாகச் சேர்ந்தாரென்பதூஉம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் காத்தானென்பதூஉம், விருந்து நாட்டென்பதனால் திறைபெற்ற புதியநாடென்பதூஉம் பெற்றாம்; ஏனைய வற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. ஏதினாடு - புதியநாடு; ஆறின்றிப் பகைவர்பொருளை விரும்பின நாடடென்றும் அவரையகன்ற நாட்டென்றும் பொருள்கூறுக. செருவின் மேம்பட்ட என்றது, நாடுகளை. அதனாற்பெற்ற வென்றியெனவே நாடு திறை பெற்றமை கூறிற்று." என்பர் நச். தொல். அகத். சூ. 28. (பிரதிபேதம்) 1 என்றாள். `
|