140

தா[னு](மு)ம் பெற்று இறையிலேசிறந்துகாட்டி ஒருநாள் நீர்பிரியுங்காலத்துத் தோள் மெலிகையினாலே தா[ன்](ம்) உதவிசெய்யாது கழன்றுபோம் வளையெனவுஞ் சில பகை உளவன்றோ? எ - று.

அப்பகையைப் பேணும் வளையெனவுமென்றது (1) சிறந்து அழகுதருமாயினும் பகையாயிற்றென்னுங் குறிப்பிற்று.

21 ஒருநாணீ ரளிக்குங்கா லொளிசிறந் தொருநாணீர்
பாராட்டாக் காற்பசக்கு நுதலெனவு 1 முளதன்றோ
பொருந்திய (2) கேண்மையின் மறையுணர்ந் தம்மறை
பிரிந்தக்காற் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல்

எ - து: இருவர் மனமும் பொருந்திய நட்பாலே அவன்கூறிய மறைப் பொருளை அறிந்து அம்மறைப் பொருளை அவன் நீங்கினாற் பிறர்க்கு இருந்து சொல்லும் பெருமை யில்லாதார் உறவுபோலே ஒரு நாள் நீர் அளிசெய்யுங் காலத்து நும் அளிக்குத் தானுங் கூடினாற்போன்று ஒளி மிக்கு ஒரு நாள் நீர் அளியாக்காலத்து நும்முடைய குணத்தைப் பிறர்க்கு அறிவித்துப் பசந்து காட்டும் நுதலெனவும் ஒரு பகை உண்டன்றோ? எ - று.

அப்பகையைப் பேணும் நுதலெனவுமென்றது, சிறப்புறுப்பாய் அழகு கொடுத்தற்கு உரியது பகையாயிற்றென்னுங் குறிப்பிற்று. மெய்யெல்லாங் கோலஞ்செய்தாலும் நுதற்குத் திலகம் முதலியன தீட்டாக்கால் அவை கோலமாய்த் தோன்றாததன்மை நுதற்கு உளதாகலின், 2அது சிறப்புறுப்பாயிற்று.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு; எ - து: என்று; எ - று. ஆங்கு அசை.

இது தனிச்சொல்.

(26). (3) யாநிற் கூறுவ தெவனுண் டெம்மினு
நீநற் கறிந்தனை நெடுந்தகை (4) வானந்

1. "விரும்பிய குழைதொடி மின்செய் கண்டிகை, மருங்கிறச் சுமப்பினும் வளைகைக் கில்லெனி, னரும்பிய முலையினார்க் கழகுண் டாகுமோ" திருவிளை. வளையல். 24.

2. "நட்டான், மறைகாவா விட்டவன் செல்வுழிச்செல்க" நாலடி 230.

3. "யாநிற்கூறவு மெமகொள்ளா யாயினை" கலி, 3 : 19.

4. (அ) "வானத் துளிநோக்கி வாழுமுலகம்" (ஆ) "மழையின்றி மாநிலத் தார்க்கில்லை" நான்மணி. 28, 48.
(இ) "வானோக்கிவாழு முலகெல்லாம்" குறள். 542. (ஈ) “துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த,
னளியின்மை வாழு முயிர்க்கு” குறள். 557. (உ) "வானோக்கி நிற்குமுலகென்னவும்" கந்த. திருநகரப். 62. என்பவையும் (ஊ) "தூமகேது புவிக்கெனத்தோன்றிய" கம்ப. மந்தரைசூழ்ச்சி. 21. என்பதும் (எ) "விசும்புமெய்யகல" 'என்பதற்கு' மழை யில்லாமைக்கு உற்பாதமாகிய தூமத்தோற்றமின்மையான். ஆகாயவெளி தன்வடிவு

(பிரதிபேதம்) 1 உளவன்றோ, 2 சிறப்புறுப்பாயிற்று.