எ - து; ஒருவர்க்குச் செல்வமுண்டான இடத்து நீங்காதிருந்து அவருடைய செல்வத்தை நுகர்ந்து பின்னை அவர் (1) மிடித்தகாலத்து அவர்க்கு ஒன்றை உதவுதலில்லாத அறிவில்லாதாருடைய உறவுபோலே நீர் இவ்விடத்தே கூடியிருந்து அருள்செய்யுங்காலத்து இவட்கு உண்டாகிய அழகைத்
மென்பார் சிலர்" (இ) "இலாஅஅர்க் கில்லை தமர்" (ஈ) " உண்டாய போழ்தி னுடைந்துழிக் காகம்போற், றொண்டா யிரவர் தொகுபவே-வண்டாய்த், திருதருங் காலத்துத் தீதிலிரோ வென்பா, ரொருவரு மிவ்வுலகத்தில்" (உ) "வாழாதார்க் கில்லைத் தமர்" நாலடி.யார். 113, 283, 284, 290. (ஊ) "கெட்டறிப கேளிரா னாயபயன்" நான்மணி. 5 (எ) "கடையாயார் நட்பேபோற் காஞ்சி நல்லூர, வுடைய விளநல முண்டாய்" திணைமொழியைம். 33. (ஏ) "கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ, பெட்டாங் கவர்பின் செலல்" குறள். 1293. (ஐ) "முட்டின் றொருவ ருடைய பொழுதின்க, ணட்டிற்றுத் தின்பவ ராயிரவ ராபவே, கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக், கெட்டார்க்கு நட்டாரோ வில்" பழ. 59. (ஒ) "அற்ற குளத்தி லறுநீர்ப் பறவைபோ, லுற்றுழித்தீர்வா ருறவல்லர்" மூதுரை. (ஓ) "பொருள்கை யுண்டாய்ச் செல்லக்காணிற் போற்றியென் றேற்றெழுவ, ரிருள்கொ டுன்பத் தின்மைகாணி லென்னேயென்பாருமில்லை" திருவாய்மொழி. (9) 1; 3. (ஒள) "தொழுமக னாயினுந் துற்றுடை யானைப், பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப, விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற், பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப" வளையாபதி. (ஃ) "நறிதாநல் லமிர்துண்ண நல்கலிற், பிறியாவின் னுயிர் பெற்ற பெற்றிதா, மறியாரோ நமனார தன்றெனிற், சிறியாரோ வுபகாரஞ் சிந்தியார்" கம்ப. அரசியற். 6. (அஅ) "வார்க்குறு வனைகழற் றம்முன் வாழ்ந்தநாள், சீர்க்குற வாயிடைச் செறுநர் சீறிய, போர்க்குற வன்றியே புகுந்த போதிவ, னார்க்குற வாகுவ னருளி னாழியாய்". கம்ப. விபீடண. 66. (ஆஆ)“உள்ளபோ தினிதுண்டிலாதபோ தவரோ டுறவுவிட் டுறுமிடந்தேடு, மொள்ளிய ரல்லா ருறவுபோல்" இராமா. சீதைவனம் புகு. 18. (இஇ) "வாழ்ந்தார்க் குறவு வழியினு முளதாந், தாழ்ந்தார்க் குறவிலை தமரினும்" புலவராற். ......................... (ஈஈ) "படைப்பதற்கே யரியபொருள் கொண்டார்க் கல்லாற் பயன்பயவாத், துடைப்பதற்கே யரும்வறுமை யவர்க்கொன்றுண்டோ சுற்றமதே" தேம். மகவருள். 62. 1. குறள். 1293. - இன் விசேடவுரையில் "ஒல்கிடத்துலப்பிலா வுணர்வில்லார் தொடர்பாயிற்று நின்றொடர்பென்பதாம்" என இவ்வுரைக்கு மூலமாகிய அடியை அமைத்தெழுதியிருத்தல் ஈண்டுஅறிதற் பாலது.
|