10 | மணக்குங்கான் மலரன்ன தகையவாய்ச் 1சிறிதுநீர் (1) தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவு முளவன்றோ (2) சிறப்புச்செய் துழையராப் 2புகழ்பேத்தி மற்றவர் (3) புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் |
எ - து; தம்மிடத்தே இருந்தாராக அவர்களுக்குச் சிறப்புக்களைச் செய்து புகழ்ந்துவாழ்த்தி அவர் எழுந்த அளவிலே அவர்க்குள்ள பழிகளைப் பலர்க்குங் கூறும் புறங்கூறுவாருடைய உறவுபோல நீர் கூடியிருக்குங் காலத்துச் செவ்வியைத் தோற்றுவித்து மலரையொத்த தகைமையினையுடைய வாய்ச் சிறிதுபொழுது நீர் பிரியுங்காலத்து நும் பழியைத் தூற்றி அழுதலமையாத கண்ணெனவுஞ் சில பகை உளவன்றோ? எ - று. அப்பகையைப் பேணுங் கண்ணெனவு மென்றது "கண்ணிற் சிறந்தவுறுப்பில்லை" (4) எனப்பட்டும் 3 பகையாயிருக்குமென்னுங் குறிப்பிற்று. (15). | ஈங்குநீ ரளிக்குங்கா லிறைசிறந் தொருநாணீர் நீங்குங்கா 4னெகிழ்போடும் வளையெனவு முளவன்றோ (5) செல்வத்துட் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவ 5ரொல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்புபோல் |
1. "தணத்தல்" நீக்கங் குறித்து வருதற்கு "தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவு முளவன்றோ" என்பது மேற்கோள்; தொல். உரி. சூ. 79. 'அன்னபிறவும்' தெய். 2. (அ) "நட்டார்ப் புறங்கூறான் வாழ்த னனியினிதே" இனியது. 20. (ஆ) "முன்னின் றொருவன் முகத்தினும் வாயினுங், கன்னின் றுருகக் கலந்துரைத்துப் - பின்னின், றிழித்துரைக்குஞ் சான்றோரை யஞ்சியே தேவர், விழித்திமையா நின்ற நிலை" அற. 49. (இ) " புறங்கூற்றாளர்" என்பதற்கு "சிறப்புச் செய்துழி உழைநின்றுபுகழ்ந்து அவர் புறக்கொடையிற் பழிதூற்றுவார்" என இவ்வடிகளின் சொற்பொருளை உட்கொண்டு அடியார்க்கு நல்லார் எழுதியிருத்தல் ஈண்டு அறியத்தக்கது. சிலப். 5; 131. 3. "தம்பி புறக்கொடைகாத்து நிற்ப" கம்ப. மாயாசனக. 23. என்பதனாலும் புறக்கொடை யென்னும் சொல்லின் பொருளை ஆராய்க. 4. நான்மணி. 56. 5. (அ) "நிறைந்தோர்த் தேரு நெஞ்சமொடு குறைந்தோர்ப, பயனின்மையிற் பற்றுவிட் டொரூஉ, நயனின் மாக்கள்" அகம். 71. (ஆ) "காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து, மேலாடு மீனிற் பலராவரேலா, விடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட, தொடர்புடையே (பிரதிபேதம்) 1 சிறிதுநீ, 2 புகழ்போற்றி, 3 பகையாமென்னும், 4 நெகிழ்போகும், 5 ஒல்கத்து நல்கிலா வுணர்விலார்.
|