வடமொழிப்பெயர் பெற்ற வயக்குறு மண்டிலம் போலும் முகத்தவனென்றது, (1)' ஆதித்தரிற் (2) 1பகனென்னும் வடமொழிப்பெயரைப் பெற்ற விளங்குதலுறும் ஆதித்தனைப் போலும் முகத்தையுடையவனென்பது. அவன் தான் குருடாயினமையிற் பிறரைக்காணாதவாறுபோல இவனும் பிறரைக் காணாத முகத்தையுடையவனென்றவாறு என்றது 2திருதராஷ்டிரனை. இனி, விளக்கமுற்ற (3) கண்ணாடியின் பெயரை வடசொல்லாகிய பெயராற் பெற்ற முகத்தவன் என்றலுமாம். அது (4) 3தர்ப்பணானனனென்னும்பெயரை. அது பிறரைத்தான்காணாதவாறுபோல இவனும் பிறரைக்காணானென்றதாம். இனி விளக்கமுற்ற நாடெனநின்ற அச்சொல்லினைத் 4திருதராஷ்டிரனென்னும் வடமொழிப் பெயராலே தமிழ்ச்சொலீறாகத் திரித்த 5ததராயனென்னும் பெயர் பெற்ற, பாண்டுவுக்கு மூத்தவனென்றும் (?) உரைப்ப. முற்றிய முழங்கழலை இனங்காக்கும் வேழம், புகையழலையுடைய அவ்வரக்கில்லை அவ்வளிமகன் உடைத்துக் கிளைகளோடே போவான்போல அதர்பட மிதித்துக் குழுவொடு புணர்ந்துபோஞ் சுரமென்க. அழலை மிதித்துப் போமென முடிந்தது. அழுவஞ்சூழ் குன்று அழல்சுரமென்க. இது சுரத்திற்கு அடை. (5) ஐய! கேண்மினென்பது, ஒருமைப்பன்மைமயக்கம், ஆயில், ஆலென விகாரமாயிற்று. இது தரவு.
1. " வழுவில் சிறப்புவாய்ந்த வடசொற் பெயரால் விளங்கு, மழல்வெம்பருதி வதனத் தரசற் கண்டானன்றே" பாக. (10) அக்குரூரனை, 3. 2. சிவபெருமானேவலால் தக்கன்வேள்வியை அழிக்கச்சென்ற வீரபத்திரநாயனாரால் ஒறுக்கப்பட்ட தேவர்களில் ஆதித்தர் வகையின்கண் அரியமா பூடா பகனென்னு மூவருள், பகனென்பவன் கண்ணிழந்தானென்பது புராணகதை; (அ) " பகன்கண் கொண்டார்" தே. (ஆ) "பகன்றாமரைக்கண் கெடக்கடந் தோன்" கோவையார். 184. 3. மண்டிலம் - கண்ணாடி; கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை, மையறு மண்டிலம்போலக் காட்ட" மணி. 25; 136-7. 4. "முகுர வானனனும்" சம்பவ. 115. "முகமுகு ரம்புரை முதலொடு" வாரணாவத. 102. "ஆடித் திருமுகமன்னவன்" அருச்சுனன்றவ. 165. "முகுரானனன்மைந்தனும்" “ஆடிமுகத் தரசினுக்கும்" பதினெட்டாம், 194. 239. என்னும் பாரதச் செய்யுட்களும் இக்கருத்துப் பற்றி வந்தன. 5. "ஐயகேண்மின்" கலி. 2; 10; பக்கம், 16; 3-குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்) 1 அனுகனென்னும், 2 திரித, 3 தர்ப்பணனென்னும், 4 திரித 5 தாரயனென்னும்.
|