136

(1) லைவரென் றுலகேத்து மரசர்க ளகத்தராக்
கைபுனை யரக்கில்லைக் கதழெரி சூழ்ந்தாங்குக்
5களிதிகழ் கடாஅத்த கடுங்களி றகத்தவா
(2) முளிகழை யுயர்மலை முற்றிய முழங்கழ
லொள்ளுரு (3) வரக்கில்லை வளிமக னுடைத்துத்தன்
னுள்ளத்துக் 1கிளைகளோ டுயப்போகு வான்போல
வெழுவுறழ் தடக்கையி னினங்காக்கு மெழில்வேழ
10மழுவஞ்சூழ் புகையழ லதர்பட மிதித்துத்தங்
குழுவொடு புணர்ந்துபோங் குன்றழல் வெஞ்சுர
(4) மிறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்

எ - து; வடமொழிப் பெயர்பெற்ற வயக்குறு மண்டிலம்போலும் முகத்தவனுடையமக்களுள் மூத்ததுரியோதனன் சூட்சியாலே, ஐவரென்று உலகத்தார் புகழுந் தன்மபுத்திரன் முதலியோர் உள்ளேயாகக், கையாலே புனையப்பட்ட அரக்குமாளிகையை விரைந்து நெருப்புச்சூழ்ந்தாற்போல, களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிறுகள் உள்ளேயாக, உலர்ந்த மூங்கிலையுடைய உயர்ந்த மலையைச் சூழ்ந்த முழங்குகின்ற அழலைக், கணையத்தை 2மாறுபடுகின்ற தடக்கையினையுடைய 3தம் இனத்தைக் காக்கும் அழகினையுடைய வேழம், புகையழலையுடைத்தாகிய ஒள்ளிய உருவத்தினையுடைய அவ்வரக்கில்லை அந்த வீமசேனன் அழித்துத் தன் உளத்திற்குப் 4பொருந்தின சுற்றத்தோடே பிழைக்கப் போகின்றவனைப்போல, அதர்படும்படி மிதித்துத் தம்முடைய திரளோடே கூடிப் போதுங் காட்டுப் பரப்புச் சூழ்ந்த குன்று அழலும் வெய்தாகிய சுரத்தை இறப்பீராயின், ஐயனே! பின்னை இவளுடைய நிலைமையைக் கேட்பீராக;
எ - று.


1. (அ) "கூரெரி வளைக்கப்பட்ட, பஞ்சவர் போலநின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்." சீவக. 1237. ('ஆ) "மும்மதக் களிவேழ மூடிய விருளத்துச், செம்மணிக் குகையுள்ளாற் சேவகங் கொண்டொழிந்து, சும்மைகொண் டொளிர்கிரணச் சோதியைத் தழலென்னா, விம்மென வீமனைப்போ லினத்தொடு மிரிவன வால்" பேரூர். காமதேனு. 50.

2. சீர்வகை மேற்கதுவாய் மோனைக்கு " முளிகழை..........................முழங்கழல்" என்பது மேற்கோள். தொல். செய். சூ. 92. நச்.

3. இச்செய்தி உய்வதற் குய்யயா விடமில்லை யென்பதற்கு "அரக்கிலலுட், பொய்யற்ற வைவரும் போயினா ரில்லையே, யுய்வதற்குய்யாவிடம்" என உதாரணமாக்கப் பெற்றுள்ளது. பழ. 280.

4. தஞ்சை. 224 விசேடவுரையில் "வாரன்மின் ஒருமை பன்மை மயக்கம்; என்னை? வயக்குறுமண்டில மென்னும் பாலைக்கலியில் 'இறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்' என்றனபோலக் கொள்க" என இப்பகுதி மேற்கோளாக வந்துள்ளது; ஆராய்க.

(பிரதிபேதம்) 1கிளையோடு, 2 மாறுபடுக்கின்ற, 3 தன், 4 பொருந்தியவன் சுற்றத்தோடே