| வெழுவுறழ் தடக்கையி னினங்காக்கு மெழில்வேழ | 10 | மழுவஞ்சூழ் புகையழ லதர்பட மிதித்துத்தங் குழுவொடு புணர்ந்துபோங் குன்றழல் வெஞ்சுர மிறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்; | 13 | மணக்குங்கான் மலரன்ன தகையவாய்ச் சிறிதுநீ தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவு முளவன்றோ சிறப்புச்செய் துழையராப் புகழ்பேற்றி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்; | 17 | ஈங்குநீ ரளிக்குங்கா லிறைசிறந் தொருநாணீர் நீங்குங்கா னெகிழ்பேகும் வளையெனவு முளவன்றோ செல்வத்துட் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவ ரொல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்புபோல்; | 21 | ஒருநாணீ ரளிக்குங்கா லொளிசிறந் தொருநாணீர் பாராட்டாக் காற்பசக்கு நுதலெனவு முளவன்றோ பொருந்திய கேண்மையின் மறையுணர்ந் தம்மறை பிரிந்தக்காற் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல்; எனவாங்கு; | 26 | யாநிற் கூறுவ தெவனுண் டெம்மினு நீநற் கறிந்தனை நெடுந்தகை வானந்‘ துளிமாறு பொழுதினிவ் வுலகம் போலுநின் னளிமாறு பொழுதினிவ் வாயிழை கவினே. |
இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி நீ பிரிந்தாற் பீடிலார் தொடர்பு போல நும்மை அலர் தூற்றுவன இவ்வகைப்பட்டன சிலவுளவெனத் தலைவி ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தது. இதன் பொருள். (1) வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுண் முதியவன் புணர்ப்பினா
1. சீர்வகையான் வருங் கலியடி தளை விரவி வருதற்கு " வயக் குறுமண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற" என்பது மேற்கோள். தொல். செய் சூ. 61. நச்.
|