படுக்கையிற் புணர்ந்த புணர்ச்சியிடத்தே என் (1) தோளிலே துயில்கொண்டு கனாக்காண்கின்றவர், ஆராய்ந்த கோற்றொழிலையுடைய செறிந்த தொடியணிந்த முன்கையினையுடையாள் கையாறுகொள்ளாளாய்க், குத்துங் கொம்பினையுடைய யானை நீர் வேட்கையினாலே விளங்குகின்ற பேய்த்தேரின் பொருட்டு ஓடும் நெடுமலையில் வெய்யசுரத்தைப் போய் இரு பெரு வேந்தரையுஞ் சந்துசெய்வித்தற்கு நடுவாகநின்று சந்துசெய்வித்த பின்னர் யாம் பெறுதற்கு உரியவாய் அவர் எமக்குச்செய்யும் பூசனையாகிய பொருள் அவர் தந்து முடியுமளவும், தனக்கு வரைவினையுடைய இல்லறத்தையுங் காத்துச் செந்தீயையும் பாதுகாக்க வல்லளோவென்று கூறினார்; ஆய்ந்த இழையினையுடையாய்! நங் காதலர் கூட்டத்திற்கு இடையீடாகக் கொண்ட காரியம் பொருள்வயிற் பிரிவாயின், யாம் தம்மைப் பிரிந்து உயிர்வாழும் வலியிலே மாயின், இனி, அவள் மார்பிற் றொய்யிலை நீங்காதவர் இப்பொழுது துறந்தாரென்று நொய்ய மகளிர் கூறும் பழி தம்மிடத்தே நிற்ப, என்னுயிர் தம்மோடேகூடப் போயிற்றென்று சொல்;1 எ-று. நெஞ்சுநடுக்குறக் கேட்டது இவ்வாலிலே பேயுண்டென்று கேட்டாற் 2போல்வது. இன்கிளவி, பின்பு காரியத்தில் இனிய கிளவி; தீங்கிளவி, கேட்டகாலத்தில் இனிய கிளவி. கனவுவாரென்றது தொடங்கி என்றாரென்ற துணையும் கனவென்னும் மெய்ப்பாடு. கையாறு, உயிர்ப்பின்றி வினையொழிந்தயர்தல். தொய்யிலவரெனக் கூட்டுக. போயின்றென்ற குற்றுகரம் இன்பெற்று 3 னகரந் திரியாமல் நின்றது; தெளிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினாள். இதனால், தலைவிக்கு 4 இழிவும் தோழிக்கு அச்சமும் பிறந்தன. இது சீருந் தளையுஞ் சிதையாமற் பன்னீரடியின் இகந்து ஒரு பொருணுதலாத சீர்வகைக் கலிவெண்பா. (23) (25). | (2) வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுண் முதியவன் புணர்ப்பினா லைவரென் றுலகேத்து மரசர்க ளகத்தராக் கைபுனை யரக்கில்லைக் கதழெரி சூழ்ந்தாங்குக் | | 5 களிதிகழ் கடாஅத்த கடுங்களி றகத்தவா முளிகழை யுயர்மலை முற்றிய முழங்கழ லொள்ளுரு வரக்கில்லை வளிமக னுடைத்துத்தன் னுள்ளத்துக் கிளைகளோ டுயப்போகு வான்போல |
1. கலி. 126: 15 ஆம் அடிக் குறிப்புப் பார்க்க. 2. இச்செய்யுள் தரவு பன்னிரண்டடியான் வந்ததற்கு மேற்கோள். தொல். செய். சூ. 131. ' போக்கியல்' இளம். (பிரதிபேதம்) 1 எனத் தோழிக்குக்கூறினாள், 2 போல்வன, 3 இனத்தாற்றி்ரியாமல், 4 இழிவுபிறந்தது; தோழிக்கு அச்சம் பிறந்தது.
|