133

(10). (1) விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு
நெடுமலை வெஞ்சுரம் போகி (2) 1நடுநின்று
செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய்
தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி
யாமுயிர் வாழு மதுகை 2யிலேமாயிற்
15  றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி
னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு
போயின்று 3சொல்லென் னுயிர்.

இது தலைமகன் குறிப்புக் கண்டு பிரிவனென ஐயுற்றுச் செல்கின்ற தலைவி அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமைகேட்டுப் பொருள் வயிற் பிரிகின்றானெனத் துணிந்து ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது,

இது, "மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே" (3) என்பதனால் அந்தணன் அறங் கருதித் தூதிற்பிரிந்து அவ்வரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருதற்குப் பிரிகின்றதென்று கொள்க. இது "வேற்று நாட்டகல்வயின் விழுமம்" (4) கூறுகின்றது.

இதன் பொருள்.

இன்றீங்கிளவியை யுடையாய் ! நெஞ்சு நடுக்கமுறும்படி பலகாலுங் கேட்டும் கேட்டஅதனை உண்டோ இல்லையோ வென்று ஐயுற்றும் தாம் அஞ்சியிருந்த பொருள் தாங் கேட்டபடியிலே மெய்யாய் வருத்தமாமெனும் பழமொழி, அறுதியாக உண்மை; அஃது எங்ஙனேயென்னில், நின்னுடைய 4உறவானவர், பலநாளும் புதியதொன்றாக என்னைப் பாராட்டுகையினாலே யானும் இப்பாராட்டுதல் ஒரு பிரிவையுடைத்தென்று கருதி அப்பிரிவை ஆராயா நிற்க, (5) ஐந்துவகையாகக் கூட்டின மாசில்லாத வண்மையையுடைய


1. இடுதலென்பது இவ்வாறே குத்துதலென்னும் பொருளில் வருதலை (அ) "எயிறு படையாக வெயிற்கத விடாஅ" என்னும் புறம். 3. மூலமும் அதனுரையும் (ஆ) " இடுமருப் பியானையூ ரிருது பன்னன் பால்" உத்தரகோச. நளசக்கர. 19. என்பதும் வலியுறுத்தும். (இ) “இடுமருப் பியானை யெறிந்த வெற்கே” புறம். 303: 9. பிரதிபேதம்.

2. "நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றார்" என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்ற தாமென இதனை அந்தணன் சந்துசெய்து பொருளீட்டுதற்குப் பிரியும் தூதிற்பிரிவிற்கு மேற்கோள் காட்டினர், இவ்வுரையாசிரியர்; தொல். கற்பியல். சூ. 49.

3. தொல். அகத். சூ. 29.

4. தொல். கற். சூ. 5.

5. "சிறுபூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், -உறுதூவி தாமிவையோ ரைந்து"

(பிரதிபேதம்) 1 நடுநின்றெஞ், 2 இலமாயிற, 3 கொல்லென், 4 உறவானவன்.