132

(24). (1) நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா
மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ
லின்றீங் கிளவியாய் வாய்மன்ற (2) நின்கேள்
புதுவது பன்னாளும் பாராட்ட யானு
5 மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர
மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட்
(3) பாயல்கொண் டென்றோட் 1கனவுவா ராய்கோற்
(4) றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ

1. இச்செய்யுள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு தலைமகள் கூறியதற்கும் (தொல். அகத். சூ. 45. 'எஞ்சியோர்க்கும்' இளம்.) அந்தணர் பொருண் முடித்தற்காகத் தூதுபற்றிப் பிரிதற்கும் (தொல். அகத். சூ 29. நச்.) தலைவன்க ணிகழ்ந்தது தலைவிநினைந்து தோழிக்குக் கூறியதற்கும் (தொல். அகத். சூ 43 நச்.) பிரியக்கருதிய தலைவன் பள்ளி யிடத்துக் கனவிற் கூறுத லாகிய வேற்றுநாட் டகல்வயின் விழுமத்துக்கும் (தொல். கற். சூ. 5. நச்.) பதினே ழடியான் வந்தகலி வெண்பாட்டிற்கும் (தொல். செய் சூ. 160. பே.) மேற்கோள். "நெஞ்சு நடுக்குற..........................மிதுவொன் றுடைத்தென வெண்ணி" என்பது பாராட்டினால் தலைமகன் பிரிவு தலைமக ளுணர்ந்ததற்கு மேற்கோள். தொல். பொருளியல் சூ. 36. 'செய்பொருள்' இளம். " நெஞ்சுநடுக்குறக் கேட்டுமெய்வருந்தி" மணி. 24. 4.

2. "நின்கேள், புதுவது..........................றுடைத்தென வெண்ணி" என்பது தோழிகேட்பத் தலைமகள் கூற்று வந்ததற்கு மேற்கோள். தொல். செய். சூ. 196. பே. நச்.

3. (அ) அரற்றென்பது உறக்கத்தின்கண்வரும் 2வாய்ச்சொலவு; அதுவும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று; முன் உறக்கம்வைத்தலானும் பின் கனவுவைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்ட தென்று கூறி, "பாயல்கொண்டென்றோட் கனவுவா ராய்கோற்..........................செய்பொருண் முற்றுமளவு" என்பதனை அன்மெய்ப்பாட்டுக்கு மேற்கோள் காட்டினர். இளம் பூரணர்; தொல். மெய்ப். சூ. 12. (ஆ) "காதல் பெருமையிற் கனவினு மரற்றும்" என்பது புறம் 198.

4. கையாறென்பது காதலர் பிரிந்தால் வருந் துன்பமும் அந்நிகரன பிறவுமென்று கூறி, "தொடிநிரை.....................................வல்லுவள் கொல்லோ" என்பதனை அம்மெய்ப் பாட்டுக்கு மேற்கோள் காட்டினர், இளம் பூரணர்; தொல். மெய்ப். சூ. 12.

(பிரதிபேதம்) 1 கனவுவான, 2 வாய்ச்சோர்வு.