129

இனியா
(1)னுண்ணலு முண்ணேன் 1வாழலும் வாழேன்

எ - து; விளங்குகின்ற ஒளியினையுடையவாகிய கொம்பினையுடைய யானையை யலைப்பார் அந்நிலத்தினின்றும் அவ்வியானையை ஓட்டுங் கவணையாலே பூக்களையுடைய கொம்பிற் பூக்களை உதிர்க்கும் 2விலங்குகின்ற மலைகள் வெம்பிய, போதலரிய வெய்ய சுரத்தைத் தனித்து நீ போக யான் நின்னைக் கைவிட்டிருத்தல், இந்த இரக்கத்தையுடைய ஊர்க்குச் சிரித்தற்குத்தக்க காரியம்; நீ இங்ஙனம் பிரியுமளவில் யான் உண்டற்கு உரியனவற்றை உண்ணுதலுஞ் செய்யேன் உயிரை வாழ்தலுஞ் செய்யேன்; எ - று.

உண்ணேன் வாழே னென்பன முழுவதுங் காரியவாசகமாயே நிற்கு மென்பது, " வினையேசெய்வது" என்னும் (2) சூத்திரத்தாற் கூறினாம். உம்மைகள் எண்ணும்மை; உண்ணலுமுண்ணேனென்பது, (3) பசியடநிற்றல்,

இது தரவு.


1. (அ) "அணியலு மணிந்தன்று" (ஆ) "அரற்றலு மரற்றும்" (இ) "அழுதலு மழூஉம்" (ஈ) "அறிதலு மறிதியோ"
(உ) "அறிதலு மறிதிரோ" (ஊ) "அறிதலு மறியார்" (எ) "இயங்கலு மியங்கும்" (ஏ) "உயிர்த்தலு முயிர்த்தனன்"
(ஐ) "ஓடலு மோடும்" (ஒ) "சுழலலுஞ் சுழலும்" (ஓ) "தொடலுந் தொட்டான்" (ஒள) "தொழலுந் தொழுதான்"
(ஃ) “நகுதலு நகூம்" (அஅ) "நல்கலு நல்குவர்" (ஆஆ) "நீங்கலு நீங்கார்" (இஇ) “நீடலு நீடும்" (ஈஈ) "பயிற்றலும் பயிற்றும்" (உஉ) "புலம்பலும் புலம்பாளோ" (ஊஊ) "மயங்கலு மயங்கும்" (எஎ) "மருட்டலு மருட்டினன்" (ஏஏ) "மாந்துதன் மாந்தி" என்பவை முதலியன உண்ணலுமுண்ணே னென்பதனொடு ஒப்புநோக் கற்பாலன.

2. தொல். வேற். மயங். சூ. 29. இச்சூத்திரத்தினச்சினார்க்கினியருரையில் (அ) "இனி யானுண்ணலு முண்ணேனென்புழி இனியான் சோற்றை யுண்ணுதலையுஞ் செய்யே னெனவும் வாழலும் வாழேனென்புழி இனி யான் உயிரை வாழுதலையுஞ் செய்யேனெனவும்....................................................உண்ணேன் வாழேனென்பன முழுதுங் காரியவாசகமாயே நின்ற வாறு காண்க" என்ற குறிப்புக் காணப்படுகிறது. (ஆ) "பாவக மேற் றானசத்தாம்" என்னும் வெண்பாவி னுரையில் பாவகத்தைப் பாவித்த லென்புழி, பாவித்தல் செய்த லென்னும் பொருட்டாய் நின்றது என்றுகூறி, ”உண்ணலுமுண்ணேன் வாழலும் வாழேன்" என்பதனை மேற்கோள் காட்டுவர், சிவஞான முனிவர்; சிவஞான பாடியம் இலக்கணவியல் சூ. 6. அதிகரணம் உ. வெண்பா 31. (இ) "உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பதனை ஒருபொருட் பன்மொழி யென்பர் மயிலைநாதர்; நன், பொது, சூ, 47.

3. தொல். மெய்ப் சூ, 22. பேராசிரியருரையிலும் "இனியான்.........வாழேன்" என்பது பசியட நிற்றற்கு மேற்கோள்.

(பிரதிபேதம்) 1 வாழ்தலும் வாழேன், 2 விளங்குகின்ற.

`