130

(8). (1) தோணல முண்டு துறக்கப் பட்டோர்
(2) வேணீ ருண்ட குடை (3) யோ ரன்னர்

எ - து: தோளின் நலத்தை நுகர்ந்து கணவராற் றுறக்கப்பட்ட மகளிர் தண்ணீர் வேட்கையாலே கோலித் தண்ணீர் குடிக்கப்பட்ட எச்சிலாற் பயன்படாத (4) குடையோலையை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.

10 நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ
(5) ரல்குநர் போகிய வூரோ ரன்னர்

எ - து; மனம் விரும்பி 1யருளின கணவரால் நலத்தை நுகர்ந்து 2விடப்பட்ட மகளிர் குடியிருப்பார் போகிய பாழூரை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.


1. (அ) உண்டற்குரிய வல்லாப்பொருளை யுண்டனபோலக் கூறலுமரபென்பதற்கு, " தோணல முண்டு............................. பூவோரன்னர்" என்பவற்றை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்; தொல். பொருளி. சூ. 19. (ஆ) அளித்தயில் கின்ற வேந்த னென்புழி "அயிறல் - உண்டல்; ' உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலு மரபே, ' தோணலமுண்டு துறக்கப்பட்டோர்' என்றார் பிறரும்;" என இதனை மேற்கோள் காட்டுவர் இவ்வுரை யாசிரியர், சீவக. 192. (இ) "தோணலமுண்டு" பரி. 12. 46. (ஈ) "தோணலமுண்டானை" கலி. 147; 7. (உ) " பச்சிள வேய்புரை தோணல முண்டானால்" (ஊ) " தோணல மினிதுமாந்தி" பாகவதம். (10) உத்தவனைக். 39. பத்திரையை. 7. என்பவையும் (எ) " தோணல முணீஇய" சிலப். 27; 248. என்பதும் இங்கே அறிதற்பாலன.

2. வேட்கை நீர் - வேணீரென்றாதலைப் போலிமொழி யென்பர் மயிலைநாதர்; இலக்கணப் போலியென்பர் இராமாநுசகவிராயர்; நன். மெய். சூ. 36.

3. "ஓரன்னள்;" குறுந். 312. "ஓரன்ன” மது. 706. குறுந். 95. அகம். 385. 4. "சூடிய பூவும் பருகிய வோலையுந் தோகையரு, நாடிய காலை நிகர்ப்பர்" தணிகை. களவு. 339. 'பனங்குடை' அகம். 121 : 12. புறம். 177 : 16; 352 : 3 நாலடி. 289.

5. (அ) "அங்குடிச் சீறூர,் மக்கள் போகிய வணிலாடு முன்றிற், புலப்பில் போலப் புல்லென், றலப்பேன் றோழியவ ரகன்ற ஞான்றே" குறுந். 41 (ஆ) "நால்வேறு தேவரு நலத்தகு சிறப்பிற், பால்வேறு தேவருமிப்பதிப் படர்ந்து, மன்னன் கரிகால் வளவனீங் கியநா, ளிந்நகர் போல்வதோ ரியல்பின தாகிப், பொன்னகர் வறிதாப் போதுவர்" மணி. 1: 37-41 (இ) கம்ப. அயோத்தி. ஆற்று. 45.

(பிரதிபேதம்) 1 அருளி அக்கணவர், 2 விட்டமகளிர்.