| இனியான் உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன் ; | 8 | தோணல முண்டு துறக்கப் பட்டோர் வேணீ ருண்ட குடையோ ரன்னர் ; | 10 | நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ ரல்குநர் போகிய வூரோ ரன்னர் ; | 12 | கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடின ரிட்ட பூவோ ரன்னர் ; எனவாங்கு ; | 15 | யானு நின்னகத் தனையே னானாது கொலைவெங் கொள்கையொடு நாயகப் படுப்ப வலைவர்க் கமர்ந்த மடமான்போல நின்னாங்கு வரூஉமென் னெஞ்சினை யென்னாங்கு வாரா தோம்பினை கொண்மே. |
இது பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி எம்மையும் உடன் கொண்டு சென்மினென்றாட்கு உடன்படாது அவன் பிரியலுறத் தனது இறந்துபாடு தோன்றக் கூறியது. இதன் பொருள். இலங்கொளி மருப்பிற் (1) கைம்மா 1வுளம்புநர் புலங்கடி கவணையிற் பூஞ்சினை 2யுதிர்க்கும் விலங்குமலை வெம்பிய போக்கரு வெஞ்சுரந் தனியே யிறப்ப யானொழிந் திருத்த 3னகுதக் கன்றிவ் வழுங்க லூர்க்கே
1. (அ) "குறவ, ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ, வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப், பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்கல்" மலை. 203-6. (ஆ) "யானைக், கால்வ லியக்க மொற்றி நடுநாள்வரை, யிடைக் கழுதின் வன்கைக் கானவன், கடுவிசைக் கவணி னெறிந்த சிறுக, லுடுவுறு கணையிற் போகிச் சாரல், வேங்கை விரியிணர் சிதறி" அகம். 292: 8-13. (பிரதிபேதம்) 1 உலம்புநர், 2 உதிர்க்கு மிலங்கு, 3 நகுதக்கொன்று, நகுதற்கொன்று. `
|