முகனும் முகனுமென்னும் உம்மைகளை வேறாகுதலென்பதன் பின்னே கூட்டி எண்ணும்மையாக்குக. பண்டுமென்ற உம்மை எதிரதும் இன்று மென்னும் உம்மை இறந்ததும்தழீஇயின. மாந்திர், அண்மைவிளி (1) ஆர்ந்து அருந்தென விகாரமாயிற்று. இறல்கொடுக்குமிடத்து பொருள்வேட்கையிடத்து என்பன கூறுவதெவனென்பதனோடு முடிந்தன. இது தரவு. 9 | (2) | நறுமுல்லை நேர்முகை யொப்பநிரைத்த | | (3) | செறிமுறைபாராட்டி னாய்மற்றெம் பல்லின் | | (4) | பறிமுறைபாராட் டினையோ வைய |
எ - து: ஐய எம் பல்லினுடைய விழுந்தெழுந்த முறைமையினையுடைய இளமைப்பருவத்தை இதற்குமுன்பு பாராட்டிவிட்டாய், அப்பருவம் ஒழிந்து நறிய முல்லையினது தன்னிலொத்த முகையையொக்கும்படி நிரைத்த செறிந்த முறைமையாகிய நுகர்ச்சிக்குரிய இளமைப்பருவமெல்லாம் முற்பாராட்டிவிட்டாயோ? அது செய்திலையே; எ -று. மற்று, வினைமாற்று; ஓகாரம், எதிர்மறை. பறிமுறை பாராட்டினாய் செறிமுறை பாராட்டினையோவெனப் பாடத்தை (5) மாறிப் பொருள்கூறுக. அன்றி அங்ஙனம் பாடமோதலும் ஒன்று. 12 நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன (6)வைவகை பாராட்டி னாய்மற்றெங் கூந்தற் செய்வினை பாராட் டினையோ வைய எ - து: ஐய, நீலமணி ஒளிவிட்டாற்போன்ற எங்கூந்தலிற் புழுகு பூசித் தாயர் (7) ஐந்து வகையாக முடித்த இளமைப் பருவத்தை இதற்கு முன்பு பாராட்டிவிட்டாய், அப்பருவம் ஒழிந்து நீதான் அதனிடத்துச் செய்யும் தொழில்களை முற்றச்செய்து பாராட்டிவிட்டாயோ? அது செய்திலையே; எ - று.
1. ஆர்ந்தென்பது அருந்தெனவருதலைக் குறுக்கும் வழிக் குறுக்கலென்பர் சேனா. தொல். எச்ச. சூ. 7. அகம். 14. பதிற். 89 : 5: ஆர்ந்தவென்பது ‘அருந்த’ என ஐங்குறு. 70, 271. இலும்வந்துள்ளது. நெடிலைக் குறுக்கிப் பின்னின்ற ரகரமெய்யின்மேல் உகரவுயிரேற்றல் தமிழ்மரபு. 2. ஒப்பவென்பது மெய்யுவமமாகச் சிறுபான்மை வருதற்கு "நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த" என்பது மேற்கோள். தொல். உவம. சூ. 15.பே. 3. "செறிநிறை வெண்பலும் பறிமுறை நிரம்பின" குறுந். 337. 4. "பறிமுறை நேர்ந்த நகையாராய்" கலி. 93: 19. 5. மாற்றலென்னும் பொருளில் மாறலென்னுஞ் சொல்லே பிறவிடங்களிலும் வந்துள்ளது. 6. "ஐம்பா லாய்கவி னேத்தி" குறிஞ்சி. 139. 7. "நறுவீயைம்பான் மகளிர்' ஐங். 84.
|