1 | பண்டு 1மிவ் வுலகத் தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே புலனுடை 2மாந்திர் | 5 | தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார்மொழிக்கட் டாவார்தாந் தந்நலந் தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கா லேதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை |
எ - து: அறிவுடைய (2) மாந்திர்! தாம் வாங்கியுண்ணுந் தனிசை வழிபாடாகச் சொல்லி இரந்துவாங்கும்பொழுது முகமலர்ந்திருத்தலும் அங்ஙனம் வாங்கின தனிசை மீண்டு கொடுக்கும்பொழுது முகங் கெட்டிருத்தலும் முன்பும் இவ்வுலகத்துள்ளார் இயல்பு; அஃது இன்றும் புதியதொன்றன்று; அஃது இயல்பாயவாறு என்னெனில், மகளிர் தம்முடைய நலத்தை அவர்களை இரந்துகொண்டு (3) தாதைத் தேடி உண்ணும் வண்டுபோல நுகர்ந்து அதனை அவர் வேண்டின காலத்து அவர்க்குக் கொடாது கேட்டினைக் கொடாநின்றீர், அங்ஙனங் கேட்டினைக் கொடுக்குமிடத்து ஏதிலார் கூறுவதெவனோ? அதுவன்றியும் நன்மைக்குணமுடையார், (4) சித்திரமெழுதுகின்றவன் உயிர்ப்புக் கொடுத்த பாவை, தான் அழியுமளவும் அக்குறிப்பு நிற்குமாறுபோலத், தாங் கூறிய மொழியிடத்து உயிராகிய உண்மைகெடார், நீ அம்மொழியிடத்து நலந்தாவி நினக்கு நிகழ்கின்ற நின் பொருள் வேட்கையிடத்து நினக்கு ஏதிலாராகிய யான் கூறுகின்ற காரியம் எத்தன்மைத்து? பயன்படாதே; எ - று. "முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும், பின்னிலைத் தோன்றுமென்மனார் புலவர்." (5) என்பதனான் இது முன்னிலைப் புறமொழியாகக் கூறினாள்.
(இ) "கடன்கொண்ட வொண்பொருளைக் கைவிட் டிருப்பா, ரிடங்கொண்டு தம்மினே யென்றாற்-றொடங்கிப், பகைமேற்கொண் டார் போலக் கொண்டார்வெகுட, னகைமேலுங் கைப்பாய்விடும்" பழ. 304. (ஈ) "தாயினைக் கண்டெனச் சார்ந்துவாங்கிப்பின், பேயினைக் கண்டென வொளித்துப் பேதுறீஇ, யீயவொன் றில்லவர் கடன்களேற்றவர், மாயிருங் களிகொள வழங்கிப் போக்கினாள்" காஞ்சிப். (உ) கழுவாய்ப். 256. 1. "புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை" புறம். 76 : 2. "புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை" சிலப். 30 : 140. "புதுவது புகுந்ததோவன்றே" கந்த. மார்க்கண்டேய 220. 2. மாந்தரென்னுஞ் சொல்லுக்கு ஒருமையின்றென்பர், சிலர்; அஃது ஆண்பாலொருமையில் மாந்தனென்றும் வருகின்றது. 3. கலி 40; 24 - 5ஆம் அடிகளின் குறிப்புப்பார்க்க. 4. (அ) "சூழ்ச்சிமேலோன், சித்திரம் புணர்த்த பாவை செயலறவிருக்கு மாபோல்" கந்த. மேருப். 14. (ஆ) "துகிலத் தெழுது பாவையினான்றமை புலத்தினன்" கந்த. குமாரபுரி. 64. 5. இந்நூற்பக்கம் 123: 1-இன் குறிப்புப்பார்க்க. (பிரதிபேதம்) 1 இவ்வுலகியற்கை, 2 மாந்தீர.
|