| பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே புலனுடை மாந்திர் | 5 | தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார்மொழிக்கட் டாவார்தாந் தந்நலந் தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கா லேதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை; நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த | 10 | செறிமுறை பாராட்டி னாய்மற்றெம் பல்லின் பறிமுறை பாராட் டினையோ வைய; நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன வைவகை பாராட்டி னாய்மற்றெங் கூந்தற் செய்வினை பாராட் டினையோ வைய; | 15 | குளனணி தாமரைப் பாசரும் பேய்க்கு மிளமுலை பாராட்டி னாய்மற்றெம் மார்பிற் றளர்முலை பாராட் டினையோ வைய; எனவாங்கு; அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாடச் | 20 | சுடர்காய் சுரம்போகு நும்மையா மெங்கட் படர்கூற நின்றது முண்டோ தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை. |
இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி அதற்கு உடம்படாது தலைமகனை நெருங்கிக் களவுகாலத் தொழுக்கம் எடுத்துக்காட்டி ஆற்றுவித்து உடம்பட்ட வாய்பாட்டான் மறுத்தது. இதன் பொருள் (1) உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல்
1. (அ) முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாக நிற்பாரைக்குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுதலென்று கூறி அதற்கு "உண்கடன்..................வுலகத் தியற்கை" என்ற பகுதியை மேற்கோள் காட்டி இவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க வென்பர், இளம்; தொல். கற். சூ. 23.. ‘முன்னிலைப்’ (ஆ) நச்சினார்க்கினியரும் இதற்கே "உண்கடன் வழிமொழிந்து..............பொருள் வேட்கை" என்ற பகுதியை மேற்கோள் காட்டுவர். தொல். கற். சூ. 26.)
|