122

கின்றிலேன்; நீ தேடுகின்ற பொருடான், இத்தன்மையோர் நமக்கு உரியவரென்று கருதாதே பிறரிடத்து நின்ற நல்வினையாலே மீண்டு மீண்டு சென்று தங்கும்; நின்னையின்றிக் கண்ணிமைத்தொழில் நிகழுங்காலத்தின் எல்லையும் உயிர் வாழாத மடவோளுடைய அமையினுடைய அழகைத் தன்னிடத்தேகொண்ட தோளிரண்டினையும் மறந்து அத்தன்மைத்தாகிய பொருள் தேடுகின்ற இடத்தே இவளை விட்டுப் பிரிந்திருப்பாய்; எ - று.

அவற்றுளென இரண்டனுள் ஒன்றை வகுத்தலின் யாதுவாயதென ஒருமையாற் கூறற்பாலதுவும் (1) "அவ்விரண்டனுட் கூர்ங்கோட்ட 1காட்டுவல்" என்றது போலப் பன்மை யொருமை மயங்கிற்று, பிரிவா யென்னும் முன்னிலையேவ லொருமை முற்று, "ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும்" (2) என்றதனால் ஓவாய் நின்றது.

"உறுக ணோம்ப றன்னியல் பாகலி, னுரிய தாகுந் 2தோழிகணுரனே"(3) என்பதனாற் குற்றேவற்றொழி ‘பொருடான் பழவினை........................பிரிவோய்’ என அறிவுடையாளாகக் கூறினாள்.

இதனால், தோழிக்கு அச்சமும் தலைவற்கு அசைவும் பிறந்தன.

இஃது அவற்றுளென ஐஞ்சீரடி வந்து தனிச்சொல்லும் அடக்கியலுமின்றிச் சுரிதகம்பெற்று அடிநிமிர்ந்தோடிய கொச்சகம். (20)

22 (4)உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல்

1. "அவ்விரண்டனுட் கூர்ங்கோட்ட சுடர்வேல்" என்பதே கிடைத்த கலித்தொகைக் கையெழுத்துப் பிரதிகளி லெல்லாம் உள்ளது. (தொல். எச்ச. சூ. 65. நச்.) உரையிலும் இவ்வாறே காணப்படுகின்றது. ஆனாலும் இது தவறென்றும் (தொல். எச்ச. சூ. 65. இளம். சூ. 67.சே.) உரையிலும் காணப்படும் "அவ்விரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்" என்பதே தவறற்ற தென்றும் தோற்றுகின்றன.

2. தொல். வினை. சூ. 15.

3. தொல். பொருளி. சூ. 43. இதனுரையில் (அ) இளம்பூரணர் "கிழவரின்னோர்..............................பெயர் புறையும்" என்பது தலைமக[ற்] (ட்) குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி யியல்பாகலின் அவட்கு அறிவு உரியதாகு மென்பதற்கு மேற்கோள்காட்டினர். (ஆ) நச்சினார்க்கினியர் தலைவிக்கு வந்தவருத்தத்தைப் பரிகரித்தல் தோழிகடனாதலின் அவட்கு அறிவு உரியதாகுமென்பதற்கு "பொருடான் பழவினை.....................பிரிவோய்" என்பதை மேற்கோள் காட்டினர். தொல். பொரு. சூ. 45.

4. தாழிசை மூன்றடியால் வந்ததற்கு இச்செய்யுள் மேற்கோள். தொல். செய். சூ. 131. ‘போக்கியல்’ இளம்.

(பிரதிபேதம்) 1 சாடுவல், சுடர்வல், 2தோழிதன்னுரனே.