121

மன்ன பொருள்வயிற் பிரிவோய் (1) 1நின்னின்
றிமைப்புவரை வாழாண் மடவோ
ளமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே.

இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனை நெருங்கிக், களவுகாலத்தொழுக்கம் எடுத்துக்காட்டலாற் றெளிவுபட மொழிந்ததூஉம் பொருளது நிலையின்மையும் அவளது ஆற்றாமையுங் கூறிச் செலவு மறுத்தது.

இதன் பொருள்.

பால் தான் மருளும் மருப்பினையும் உரலின் அடியையொக்கும் நிலத்தே பாவும் அடியினையும் ஈரத்தினையுடைய நறியவாகக் கமழும் மதத்தினையுமுடைய இனத்தைப் பிரிந்த யானை வழியைக் காவல்கொண்டு நிற்கும் வேறாகிய நிலத்தைப் போய்ப் பொருள் தேடுகின்ற இடத்தே இவளைப் பிரிந்திருத்தலை நெஞ்சு விரும்புமென்று சொல்லும் அருளில்லாத சொல்லையும் நீ சொன்னாய்; எம்மை விரும்பி நன்மையையுடைய நறிய நுதலை நீவி நின்னிடத்தினின்றும் பிரியேன் நீ அஞ்சுதலைத் தவிர்வாயென்று சொல்லும் நன்மையையுடைய சொல்லையும் நீ சொன்னாய்; அவ்விரண்டினுள் மயக்கத்தினையுடைய மகனே! உண்மையிடத்தன யாவைதான் அறி


(ஓ) "மாரியுந்திருவு மகளிர் மனமுந், தக்குழி நில்லாது பட்டுழிப் படும்" பெருங். (1) 35: 156 - 7. (ஒள) "நல்வினைப்பி னல்லா னறுந்தா மரையாளுஞ் செல்லாள் சிறந்தார்பி னாயினும்" அறநெறி. 124. (ஃ) "புண்ணிய முலந்தபின்............................ எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையு, நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே" சூளா. முத்தி 15. என்பவற்றாலும். (அஅ) "அகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ், சகடக்கால் போல வரும்" நாலடி. 2. (ஆஆ)"அற்கா வியல்பிற்றுச் செல்வம்" குறள். 333. (இஇ) "பொருள் போற்றி வழங்கும்நெறி" - ‘போற்றி வழங்குதல்’ பேணிக்கொண்டொழுகுதல்: அஃதாவது ஒருவரோடு நட்பில்லாத அதனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண் டொழுகுதல். குறள். 477. விசேடவுரை (ஈஈ) "திருவினைத் தீராமையார்க்குங்கயிறு" - ‘ஒருவர் கண்ணும் நில்லாது நீங்குஞ் செல்வத்தைத் தன்க ணீங்காமற் பிணிக்குங் கயிறாம்" ‘தீராமையென்றதனால், தீர்தன்மாலைய தென்பது பெற்றாம்;’ குறள். 482. விசேடவுரை என்பவற்றாலும் அறிக. கலி. 8: 12-4-ம் அடிக்குறிப்புக்களுள் இவ்விடத்துக்குப் பொருந்து வனவும் இங்கே அறிதற்பாலன.

1. "எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வ, தந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே" (கலி. 5: 18-9) என்பதும், இந்நூற்பக்கம் 40: 2-இன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்) 1 தலைவன்.