| (1) | நன்னர் நறுநுதனயந்தனை நீவி | | (2) | நின்னிற்பிரியலெ னஞ்சலோம் பென்னு நன்னர் மொழியுநீமொழிந் தனையே அவற்றுள், யாவோ 1வாயினமாஅன் மகனே | 10 | (3) | கிழவ ரின்னோரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையு |
1. "நன்னர் நறுநுத னயந்தனை நீவி" என்பது வினையெச்ச முன்னிலை யொருமை [வினைக்குறிப்பு] (த்தெரிநிலை) முற்றிற்கு மேற்கோள். தொல். எச்ச. சூ. 61. நச். 2. அஞ்சலோம் பென்றா ரென்பதற்கு, "தம்மை யெதிர்ப்பட்டஞான்று நின்னிற் பிரியே னஞ்சலோம் பென்றவர்" எனவும் அஞ்சலென்றவ ரென்பதற்கு, "நின்னிற் பிரியேன் அஞ்சலென்றவர்" எனவும் பரிமேலழகர் இவ்வடியைக் கருத்திற்கொண்டு பொருளெழுதியிருத்தல் இங்கே கருதற்பாலது குறள், 1149.1154. 3. திரு, கிழவரின்னோ ரென்னாது பொதுவாய் நல்வினை யுள்ளாரிடத்தே பெயர்ந்துறைதலை, (அ) "தாமரைப் பொன்மல, ரெல்லையாகும் பொதுப் பெண்ணவள்" சீவக. 1150. (ஆ) "பூவின்மேலிருந்த தெய்வத் தையலும் பொதுமை யுற்றாள்" கம்ப. மாயாசனக. 62. (இ) "திருமக ளிவளென......................பேதை வைகுமே" - திருவுவமம் வடிவிற்கும் நல்வினை யுடையோ னிடத்து ஏகுந்துணையும் பொதுவா யிருத்தற்கும்" சீவக. 183. விசேடவுரை. என்பவற்றாலும் (ஈ) "சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா, வுறுகாலத் தூற்றாகா வாமிடத்தே யாகுஞ், சிறுகாலைப் பட்ட பொறியும்" நாலடி 110. (உ) "பொறியுந்தொடற் பாலார்கண்ணேதொடும்" பழ. 205. (ஊ) "பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந், திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்ட, மொருமுழமுஞ் சேறலில ரேனும்பொரு ளூர்க்கே, வரும்வழி வினாயுழந்து வாழ்க தவ மாதோ" (எ) "நற்றவஞ் செய்தவீர ருளவழி நயந்து நாடும், பொற்றதா மரையி னாளின்" (ஏ) "நற்றவம் பரவைஞால நாமுட னிறுப்பின்வைய, மற்றமிறவத்திற் கென்றுமையவி யனைத்து மாற்றா, திற்றென வுணர்ந்து நிற்பிற் றிருமக ளென்று நீங்காள், பற்றொடே நிற்பினென்றுந் திருமகள் பற்றல்செல்லாள்." சீவக. 2556, 2738, 2983. (ஐ) "வினையொழிகாலைத் திருவின் செல்வி, யனையே மாகி யாடவர்த் துறப்பேம்" மணி. 18: 21-2. (ஒ) "பழமையிற் பசையாது கிழமையிற் கெழுவாது, தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட்டொரீஇ" பெருங். (1) 35 : 136 -8 (பிரதிபேதம்) 1 வாயன.
|