119

21 (1) 1பான்மருண் மருப்பி (2) னுரல்புரை பாவடி
யீர்நறுங் (3) கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்த
லாறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து
பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னு
மருளில் சொல்லு நீசொல் லினையே

1. (அ) இச்செய்யுளை, தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளினுமென்பதற்கு மேற்கோள் காட்டி இது தலைமகனைச் சுட்டிக் கூறிய தென்றும் (தொல். அகத். சூ. 42. ‘தலைவரும்’,) (ஆ) இஃது அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தொழுகிற் றென்றும் (தொல். செய். சூ. 142. ‘தரவின்’) கூறுவர் இளம் பூரணர். (இ) இது தனிச்சொல்லும் அடக்கியலு மின்றி அடி நிமிர்ந்தொழுகிற்றென்பர். பேராசிரியர்; தொல். செய். சூ. 155. (ஈ) இஃது ‘அவற்றுள்’ என ஐஞ்சீரடி வந்து தனிச்சொல்லும் அடக்கியலு மின்றிச் சுரிதகம்பெற்று அடிநிமிர்ந் தோடிற்றென்பர், நச்; தொல். செய். சூ.155. (உ) "பாஅன் மருண்மருப் புரல்புரை பாவடி" என்பது "தத்தமரபிற் றோன்றுமன் பொருளே" என்பதற்கும் (தொல். உவம. சூ. 17. ‘தத்த’ இளம்.), (ஊ) உருவுவமத்தின்கண் மருளென்பது அருகி உவமவுருபாய் வருதற்கும் (தொல். உவம. சூ. 16. பே.) மேற்கோள்.

2. ‘உரல்புரைபாவடி’ என்பது புரை என்பது மெய்யுவம வாய்பாடாய் வருதற்கும் (தொல். உவம. சூ. 15. பே.) வடிவு பற்றிய பண்புவமைக்கும் (இ-வி. சூ. 642), மேற்கோள்.

3. யானைமதம் கமழுமென்பதனை (அ) "கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து...............யானை" மது. 44-7. (ஆ) "கமழ்கடாத் தொல்கிய மதவேழம்" கலி. 8 : 4; (இ) "வரிஞிமிறார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்" அகம். 78: 3 - 4. (ஈ) "துன்னருந்திறற் கமழ்கடாஅத்து..................................பெருங்கையானை" (உ) "மிஞிறார்க்குங் கமழ்கடாஅத்து.....................................................களிறு" புறநா. 3 : 8 - 11; 22: 6 - 8. (ஊ) "நீலயானை..............................வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி" மணி. 19: 20 - 22. (எ) "யானையின் புயல் கொண் மும்மத மணமகள் கதுப்பென நாறு மாநகர்"
(ஏ) "மையல் யானையின் படுமதங் கெடப்பகட் டரசன், செய்த மும்மதம் போற்றிசை திசைதொறுங் கமழுந்,
தெய்வ வாசத்து" சீவக. 1621, 2365. (ஐ) யானைமதமு நானமும், வாசப் பொடியொடு காயத்துக் கழும" பெருங். (1) 42: 75 - 6. (ஒ) "விழிமலர்ப்பூ சனை யுஞற்றித் திருநெடுமால் பெறுமாழி மீளவாங்கி, வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்ற மாறுமாற்றாற், பொழிமதநீர் விரையேற்றி" காஞ்சிப். கடவுள். 5. என்பவற்றாலும் உணர்க.