118

எனவாங்கு

எ - து: என்று யான் கூறவும்; எ - று.

ஆங்கு, அசை.

இது தனிச்சொல்.

20 அணையரும் வெம்மைய காடெனக் கூறுவீர்
(1)கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப்
பணையெருத் தெழி (2) லேற்றின் பின்னர்ப்
(3)பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே

எ - து: அவ்விடத்துக் காடு நீ அணைய அரிய வெம்மையையுடைய வென்று பின்னுங் கூறுகின்றவரே! பெருக்குங் கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெருமையையுடைய கழுத்தினையும் அழகையுமுடைய எற்றின்பின் நீங்காமற் றிரியும் பிணையையுங் காணா திருக்கின்றீரோ? அவை நீர் அறியப் பிரியாவே; ஆதலால், எம்மையும் உடன்கொண்டே சென்மின்; எ - று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன.

இங்ஙனந் தலைவி கூறுதல் "மரபு நிலைதிரியா" என்னும் (4) சூத்திரத்து அமைத்தது.

இஃது ஆறடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (19)


1. "கணைகழி....................வவையே" என்பது எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பதற்குமேற்கோள். தொல். மெய்ப். சூ. 22. பே. இ - வி. சூ. 580.

2. (அ) "கலையொழி பிணையிற் கலங்கிமாறி, யன்பிலி ரகறி ராயின்" நற் 37. (ஆ) "குன்றங் கவைஇய, வங்காட்டா ரிடை மடப்பிணை தழீஇத், திரிமருப் பிரலை புல்லருந் துகள" (இ) "மறியுடை மடப்பிணை தழீஇப்புறவிற், றிரிமருப் பிரலை பைம்பயி ருகள" அகம்.. 14: 4 - 6. 314 : 5 - 6. (ஈ) "உருகு மடமான் பிணையோ டுகளும்" திணைமொழியைம். 25. (உ) "மான்வீடு போழ்திற் பிணையின்னுயிர் போவதே போல்" யா-வி. சூ. 95. மேற்கோள் (ஊ) "உங்கள், கண்போற் பிணையுங் கலையுமிங் கேவரக் கண்டதுண்டோ" அம்பிகா. 85.

3. பிணையென்னுஞ்சொல் பொருணோக்கிற் பிரியாது பிணையும் பிற சாதிக்குஞ் செல்லுமாயினும், மரபு நோக்கப் பிணையென்றற்குச் சிறப்புடையன: புல்வாய் நவ்வி உழை கவரி யென்பர், பேராசிரியர்; தொல். மரபு. சூ. 57.

4. தொல். அகத். சூ. 45.