20 | பல்வளம் பகர்பூட்டும் பயனிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர்சினஞ் சொரிதலிற் றணிவில்வெங் கோடைக்குத் தண்ணயந் தணிகொள்ளும் பிணிதெற லுயக்கத்த பெருங்களிற் றினந்தாங்கு மணிதிகழ் விறன்மலை வெம்ப மண்பகத் துணிகயந் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்; | 7 | கிளிபுரை கிளவியாய் நின்னடிக் கெளியவோ தளியுறு பறியாவே காடெனக் கூறுவீர் வளியினும் வரைநில்லா வாழுநா ணும்மாகத் தளியென வுடையேன்யா னவலங்கொண் டழிவலோ; | 11 | ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்நீ யுணல்வேட்பி னாறுநீ ரிலவென வறனோக்கிக் கூறுவீர் யாறுநீர் கழிந்தன்ன விளமைநுந் நெஞ்சென்னுந் தேறுநீ ருடையேன்யான் றெருமந்தீங் கொழிவலோ; | 15 | மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கு மாணிழ லலவாண்டை மரமெனக் கூறுவீர் நீணிழற் றளிர்போல நிறனூழ்த்த லறிவேனுந் தாணிழல் கைவிட்டியான் றவிர்தலைச் சூழ்வலோ; எனவாங்கு ; | 20 | அணையரும் வெம்மைய காடெனக் கூறுவீர் கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப் பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே. |
இது பிரிவுணர்த்திய தலைவற்குத் தலைவி எம்மையும் உடன்கொண்டு சென்மி னென்றாட்கு அவன் கானின் கடுமையுந் தலைவி மென்மையுங் கூறுவது கேட்ட தலைவி நாளது சின்மையும் இளமையதருமையுங் கூறி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றது. இதன் பொருள் பல்வளம் பகர்பூட்டும் பயனிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர்சினஞ் சொரிதலிற் றணிவில்வெங் கோடைக்குத் தண்ணயந் தணிகொள்ளும் பிணிதெற லுயக்கத்த பெருங்களிற் றினந்தாங்கு
|